சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 9, 2024

சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர், விக்கிர வாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி மறைவிற்கு விழுப்புரம், திண்டிவனம் மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமைகழக அமைப்பாளர் தா.இளம்பரிதி தலைமையில் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப் பட்டது. இறுதி நிகழ்வில் விழுப்புரம் நகர செயலாளர்
ச.பழனிவேல், விழுப்புரம் மாவட்ட கழக தொழிலாளரணி தலைவர் சக்கரவர்த்தி, திண்டிவனம் மாவட்ட தலைவர் இர.அன்பழகன்,திண்டிவனம் மாவட்ட செயலாளர்
செ. பரந்தாமன், மாநில இளைஞரணி துணை செயலாளர் தா. தம்பிபிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சேலத்தில் கே.பாலகிருஷ்ணன் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் கழகப்பொறுப்பாளர்கள் பங்கேற்பு

சேலம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோட்டை மைதானத்தில் சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதி அவர்களை ஆதரித்து மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் பா. வைரம் பங்கேற்று உரையாற்றினார்.

No comments:

Post a Comment