நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஆ.இராசாவை ஆதரித்து தமிழர் தலைவர் எழுச்சியுரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 8, 2024

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஆ.இராசாவை ஆதரித்து தமிழர் தலைவர் எழுச்சியுரை!

featured image

பா.ஜ.க. வாங்கியது ‘நன்கொடை’ அல்ல; ‘வன்கொடை!’
உலகத்திற்கே விஸ்வகுரு…! கேள்வி கேட்டால் மட்டும் மவுனகுரு…!

கோத்தகிரி. ஏப். 8- நாடாளுமன்றத் தேர் தலில் ’இந்தியா’ கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆறாம் நாளில் கோத்தகிரியில் நீலகிரி தொகுதி வேட்பாளர் மாண்புமிகு, மானமிகு ஆ,ராசா அவர்களை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தி.மு.க. தலைமையிலான ’இந்தியா’ கூட்டணியில் நீலகிரி தொகுதி வேட் பாளராக தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திராவிடர் கழகத்தின் சார்பில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 7.4.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 மணி முதல் 8 மணி வரை, மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நீலகிரியில் தமிழர் தலைவர்!
நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்டத் தலைவர் நாகேந்திரன் தலைமையேற்றுச் சிறப்பித்தார். மாவட்டச் செயலாளர் ஜீவா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாண்புமிகு அமைச்சர் இராமச்சந்திரன், தி.மு.க. மாவட்டச் செயலாளர் முபாரக், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், தி.மு.க. கோத்தகிரி ஒன்றியச் செயலாளர் நெல்லைக் கண்ணன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சில்லபாபு, சி.பி.அய். பொறுப்பாளர் பெள்ளி, சி.பி. அய். (எம்) பொறுப்பாளர் மகேஷ், விடு தலை சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர் மன்னரசன், ம.தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமார், இந்திய யூனியன் முஸ்லீக் பொறுப்பாளர் அலி, மக்கள் அதிகாரம் ஆனந்தராஜ், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொறுப்பாளர் பரத், உதகை மண் டல காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப் பினர் கணேஷ், பவானிசாகர் தேர்தல் தொகுதி பொறுப்பாளர் அமுதரசன், பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், தி.மு.க. பேரூர் கழகச் செயலாளர் காளி தாஸ், தி.மு.க. மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் பரமேஸ்வரன் ஆகி யோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர்.

திராவிடர் கழகம் சார்பில் திராவிடர் கழகக் காப்பாளர் மருத்துவர் கவுதமன், மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, கோபி மாவட்டத் தலைவர் சிவலிங்கம், கோபி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சென்னியப்பன், மேட்டுப் பாளையம் மாவட்டச் செயலாளர் ரங்கசாமி, வழக்குரைஞர் அணி மாநிலத் தலைவர் வழக்குரைஞர் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் இராவணன் ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப் பித்தனர்.
முன்னிலை ஏற்று சிறப்பித்த அமைச் சர் இராமச்சந்திரன், தி.மு.க. மாவட்டச் செயலாளர் முபாரக், வேட்பாளர் ஆ.ராசா ஆகியோர் பொதுமக்களிடம் உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். இறுதியாக ஆசிரியர் பேசுவதாக அறி விக்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் நான்கு புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தார். தி.மு.க. மாவட்டச் செயலாளர் முபாரக், ஆசிரியரிடம் புத்தகங்கள் பெறுவோரின் பெயர்களை வாசித்தார்.

தொடர்ந்து போட்டி போட்டுக்கொண்டு அனைத்துக் கட்சித் தோழர்கள் ஆசிரிய ரிடம் உரிய தொகை கொடுத்து புத்தகங் களை பெற்றுக்கொண்டனர். அதற்கும் முன்னதாக அனைத்துக் கட்சித் தோழர் கள் அலையலையாக மேடைக்கு வந்து ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர். வழக்கம் போலவே ஆசிரி யர் அனைவருக்கும் ஈடுகொடுத்தார்.

மறுபடியும் ஆ.ராசா தான் வெற்றி பெறப்போகிறார்!
இறுதியாக ஆசிரியர் பேசினார். கோத்தகிரி திடல் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புடன் மக்கள் நிரம்பியிருந்த னர். சாலையோரங்களிலும், பக்கவாட்டி லும் மக்கள் கூடிநின்று ஆசிரியரின் உரையைக் கேட்கத் தயாராக இருந்தனர். அந்த எழுச்சி மிகுந்த காட்சி ஆசிரிய ருக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்துவிட் டது.
“இது வெறும் தேர்தல் மட்டும் அல்ல; இரண்டு தத்துவங்களுக்கு இடையே நடைபெறும் அறப்போர்!” என்றும் “அந்த அறப்போரில் தப்பித்தவறி மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் நாடே சிறைச் சாலை ஆகிவிடும் என்று சொல்லிவிட்டு, வெற்றி பெறப்போவது இந்தியா கூட் டணிதான்” என்றும், “மீண்டும் இந்தத் தொகுதியில் ஆ.ராசா தான் வெற்றி பெறப்போகிறார்” என்றும் சொன்னதும் விசிலும், கைதட்டலும் பறந்தன. தொடர்ந்த ஆசிரியர், ”இந்த மாதிரி ஒரு வேட்பாளர் வேற எந்தத் தொகுதிக்கும் கிடைக்க மாட்டார்” என்றதும் மக்கள் ஆரவாரித்து ஆசிரியர் கூற்றை ஆமோ தித்தனர். ”ஆ.ராசா பெரியாரின் பாசறை யில் வளர்ந்தவர்; கலைஞரின் கண்டு பிடிப்பு” என்று ஆசிரியர் அடுக்க, அடுக்க மக்கள் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆரவாரம் செய்து கொண்டே இருந்தனர். அதைக்கண்ட ஆசிரியர் மிகுந்த உற்சா கத்துடன், “நீங்கள் காட்டுகிற ஆர்வத் தைப் பார்த்தால், மீண்டும் ஆ.ராசா தான் இங்கே வெற்றி பெற போகிறார் என்று உறுதிசெய்யப்பட்டுவிட்டது” என்று தீர்ப்பு எழுதியதைப் போல் சொன்னதும், அடேயப்பா… மக்களின் எழுச்சி பீறிட்டுக் கிளம்பிவிட்டது.

பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பில்லை!
தி.மு.க. என்பது எப்படிப்பட்ட கட்சி என்று சொல்ல வந்த ஆசிரியர், “தமிழ் நாட்டின் தலைநகர், தென்மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்த போது, முதலமைச்சரிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள் என்று எல்லாரும் களத்தில் இறங்கி மக்கள் துயர் துடைக்க பணி செய்தனர். இப்படிப்பட்ட ஒரு கட்சி இந்தியாவில் வேறு எங்காவது உண்டா? ஆரவாரம் எழுந்தது. அதனூடேயே, “நாங்கள் சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்கிறோம். ஆனால், பா.ஜ.க. அப்படி உண்டா?” என்று கேட்டுவிட்டு, “இங்கே பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுபவர், விலைவாசி உயர்ந்துவிட்டதே என்று பத்திரிகையாளர் கேள்வி கேட்டால், ‘ஜெய் சிறீராம்’ என்று சொல்கிறார். இப் படியே இருந்தால், நாளைக்கு ஓட்டுப் பெட்டியைத் திறந்து பார்த்தால் அங்கும் அவருக்கு ஜெய்சிறீராம் தான்” என்றதும், புரிந்து கொண்ட மக்கள் வெடித்துச் சிரித்தனர். மேலும் அவர், தமிழ்நாட்டுக்கு மோடி ஓடி வருகிறார்; தேடி வருகிறார்; நாடி வருகிறார். ஏற்கெனவே 6 முறை வந்துவிட்டார். மறுபடியும் வரப்போகிறார். வரட்டும் அவர் எத்தனை முறை வந்தா லும், தமிழ்நாட்டிலேயே குடியேறினாலும் தமிழ்நாட்டு மக்கள் அவரை திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள்” என்றதும் மக் களின் ஆரவாரம் உச்சத்திற்கே சென்று விட்டது.

விஸ்வகுருவும் மவுனகுருவும்
தொடர்ந்து மோடியை, பா.ஜ.க.வை அம்பலபடுத்திய ஆசிரியர், “மோடி இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே விஸ்வகுரு…. ஆனால், நாங்களோ வாக்காளர்களோ கேள்வி கேட்டால் மட்டும் மவுனகுரு… என்று உதடுகளைக் குவித்து இழுத்துச் சொன்னதும் மேடை யில் இருந்தவர்கள் உட்பட அனைவரும் ‘கொல்’லென்று சிரித்துவிட்டனர். மோடி தேர்தல் விதிமுறைகளை மீறிவதையும், மத அரசியலை தொடர்ந்து செய்வதையும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இரண்டையும் ஒப் பிட்டு திராவிடர் இயக்கத்தின் ஆளு மையை புரியவைத்தார். மேலும் பா.ஜ.க. அரசின் ஊழல்களை அம்பலத்தும் போது, தேர்தல் பத்திரங்களைப் பற்றி குறிப்பிட வந்தவர், “நன்கொடை என்பது விரும்பி கொடுப்பது. ஆனால் மோடி 45 நிறுவனங்களிடம் நன்கொடைகளை வம்படியாக அடித்து பிடுங்கி இருக்கிறார். அதிலும் 33 நிறுவனங்கள் நட்டத்தில் ஓடுகின்றன. நட்டத்தில் ஓடும் கம்பெனி எப்படி நன்கொடை கொடுத்தன?” என்று கேட்டுவிட்டு, ”இதற்கெல்லாம் ஆதாரங் கள் இருக்கின்றன. இதற்குப் பெயர் நன்கொடையா? மோடி தமிழுக்கு ஒரு புதிய வார்த்தையையே வழங்கியிருக் கிறார். விரும்பிக் கொடுப்பது நன்கொடை! திரிசூலங்களைக் காட்டி பிடுங்கிக்கொள் வது வன்கொடை!” என்று தேர்தல் பத்திர ஊழல்களை சுருக்கமாகவும், சுருக்கென்று பதியும் படியும் சொல்லிவிட்டார்.

என் வயது 91 – உங்களைப் பார்த்ததும் 19
மேலும் தி.மு.க.வின் மகளிர் நலம் சார்ந்த சாதனைகளை நகைச்சுவை கலந்து சொல்லிவிட்டு, ஆ.ராசாவைப் பற்றி அதிகம் தெரிந்திராத தகவல்களைச் சொல்லிவிட்டு, தன்னைப் பற்றியும், “எனக்குக் கூட 91 வயசு ன்னு சொன்னாங்க. இங்கே வருகிற வரைக்கும் 91; உங்களைப் பார்த்ததும் 19” என்றதும் கூட்டமே கலகலத்தது. இறுதியில் எங்கள் கொள்கைத் தங்கம் ஆ.ராசா நாடாளு மன்றம் சென்றால், தமிழ்நாட்டில் வேறூன்றி இருக்கும் திராவிடர் இயக்கக் கொள்கைகள் இந்தியா எங்கும் செல்லும். ஆகவே அவரை உதயசூரியன் சின்னத் தில் வாக்களித்து அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கவேண்டும்” என்று பலத்த ஆரவாரத்திற்கிடையே கூறி தனது உரையை நிறைவு செய்தார். பின்னர் அனைவரிடமும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு கருஞ்சட்டைப் படையினருடன் புறப்பட்டார். நிகழ்ச்சி சரியாக இரவு 8 மணிக்கெல்லாம் முடிந்துவிட்டது.

No comments:

Post a Comment