மகாராட்டிரத்தில் இந்தியா கூட்டணி: தொகுதிப் பங்கீடு நிறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 9, 2024

மகாராட்டிரத்தில் இந்தியா கூட்டணி: தொகுதிப் பங்கீடு நிறைவு

மும்பை,ஏப்.9- உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக, அதிக மக்களவை தொகுதிகளை உள்ளடக்கிய மகாராட்டிரத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மகாராட்டிரத்தில் ’இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு), காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு) ஆகிய கட்சி களிடையே தொகுதிப் பங்கீடு நிறைவடைந் துள்ளது. இதை யடுத்து, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு) தலைவர் சரத்பவார், சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராட்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் ஆகிய தலைவர்கள் இன்று (ஏப்.9) கூட்டாக செய்தியாளர்களுடன் பேசினர். அப்போது, காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிடுவதாகவும், சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) 21 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு) 10 இடங்களிலும் போட்டியிட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித் துள்ளனர்.

No comments:

Post a Comment