இந்தியா கூட்டணி வெற்றிக்கு கட்டியங் கூறும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை! நீலகிரி தொகுதியில் கொள்கை வீரர் ஆ.ராசாவின் வெற்றி உறுதி! - கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 8, 2024

இந்தியா கூட்டணி வெற்றிக்கு கட்டியங் கூறும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை! நீலகிரி தொகுதியில் கொள்கை வீரர் ஆ.ராசாவின் வெற்றி உறுதி! - கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் உரை

featured image

கோத்தகிரி, ஏப்.8 – நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆ.இராசா அவர்களை ஆதரித்து கோத்தகிரியில் நடைபெற்ற (7.4.2024) பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில்
பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பேசியதாவது:

கோடை வெயிலையும் பொருட் படுத்தாமல், உடல் நலிவை பற்றியும் கவலைப்படாமல், தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மற்றும் மருத்துவர்கள் “இவ்வளவு நீண்ட பயணம் வேண்டாம் அய்யா” என்று கேட்டுக் கொண்டதற் குப் பின்னாலும் தேர்தல் பரப்புரை பயணத்தினை கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மேற் கொண்டு உள்ளார்.
ஏப்ரல் இரண்டாம் தேதி தென் காசியில் பயணம் தொடங்கியது. ஒரு நாளைக்கு இரண்டு தொகுதி கள் என்று பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். எங்கெங்கும் மக்கள் திரள். பொதுக்கூட்டங்களில் தலைவ ரின் திமுக ஆட்சியின் சாதனை பற்றிய பட்டியல் உரை ஒரு பக்கம் — இந்தியா கூட்டணி மலர வேண் டிய அவசியம் குறித்த உரைத் தொகுப்பு இன்னொரு பக்கம் —_ திராவிட மாடல் ஆட்சி இந்திய துணைக் கண்டம் முழுவதும் அமைய வேண்டிய தேவை என்ன என்பது பற்றிய விளக்கம் என்று தமது உரையில் தலைவர் முக்கால் மணி முதல் ஒரு மணி நேரம் வரை உரையாற்றுகிறார். மிகப் பெரிய மாற்றத்தை இந்தியா கூட்டணி கட் சிகளின் வேட்பாளர்களுக்கு தலை வரின் உரை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.

தமிழர் தலைவரின் உழைப்பு வீண் போகாது!

வெளியூர்களிலிருந்து கழக முன்னணியினரோ, நண்பர்களோ முக்கிய அரசியலாளர்களோ ஆசிரி யரின் உடல்நலம் எப்படி இருக்கிறது என்று கேட்கும் போது, “உடல் கிடக்கட்டுங்க, இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி தான் முக் கியம்” என்று அவர் கூறும் பதில் உடன் இருக்கும் எங்களுக்கு வியப்பை ஏற்படுத்தும். ஒரு தலைவர் என்ற எண்ணமே மேலோங்கும். சளைக் காமல், அலுப்பு இன்றி, ஓய்வை பற்றி கவலை கொள்ளாமல் தேர் தல் பரப்புரையில் பயணித்து வரும் தலைவரின் உழைப்பு வீண் போகாது!
கடந்த காலத்தில் தேர்தல்களில் “திராவிடம் வெல்லும்” என்ற முழக் கத்தை வைத்தார், வென்றது. தி.மு.க.! தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மலரும் என்றார், மலர்ந்தது! திராவிட மாடல் ஆட்சி! சாதிக்கும் என்றார், சாதித்து வருகிறது!
அதுபோலவே இன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆட்சி மலர்ந்தே தீரும், மோடி தலைமையிலான பாஜக ஆட்சி வீழ்த்தப் பட்டே தீரும், ஜூன் 5க்குப் பிறகு டில்லியில் மிகப் பெரிய ஆட்சி மாற்றம் ஏற்படும், என்று தலைவர் முழக்கமிடுகி றார். இதுவும் நடக்கும்.

மக்கள் நலனை முன்னிறுத்தும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, இந் தியா கூட்டணி ஆட்சிக்கு முன் னுரை எழுதும். திராவிடர் இயக் கத்தின் தீர்மானங் களைப் போல் வெளிவந்துள்ளது. நாளை இந்த அறிக்கையில் சொல் லப்பட்டுள்ள மக்கள் நல கருத்துக் கள் திட்டங்க ளாக சட்டங்களாக மலர இருக்கின் றன. திராவிடர் இயக்கத்தின் இணக் கமான அமைப் பாக காங்கிரஸ் வளர்ந்து வருகிறது என்பதை வெளிப்படுத்தும் கருத்துக் குவி யலே, கொள்கை நடை முறைகளே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை. வறுமை கோட் டுக்கு கீழ் உள்ள குடும்பப் பெண் களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் உரிமை தொகை வழங்கப்படும். ஏழைகளுக் கான மருத்துவ காப் பீடு. 25 லட்சமாக உயர்த்தப்படும்.
அப்ரண்டீஸ் முடித்த இளை ஞர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும். டிப்ளமோ முடித்து அப்ரண்டீஸ் முடித்த இளைஞர்க ளுக்கு பொதுத்துறையில் பயிற்சி ஏற்படுத்தப்படும். ஜம்மு காஷ்மீ ருக்கு முழு மாநில தகுதிநிலை அளிக்கப்படும். விவசாயிகளுக் கான குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க சட்டம் செய்யப்படும். மார்ச் 2024 வரையிலான அனைத்து கல்வி கடன்களும் ரத்து செய்யப்படும். வேளாண் இடுபொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி இனி இருக்காது.

அரசு பொதுத்துறை நிறுவனங் களில் ஒப்பந்த பணி முறை நீக்கப் படும். தனிநபர் வருமான வரி ஒரே விதமாக நிலையானதாக இருக்க சட்டம் செய்யப்படும். ரயில்களில் முதியோர்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படும். சிறுபான்மை மாணவர்களுக்கு மீண்டும் கல்வி உதவித்தொகை கிடைக்க வகை செய்யப்படும். ராணுவ வீரர்களை தேர்வு செய்யும் ‘அக்னி பாத்’ முறை ரத்து செய்யப் படும். அனைத்து ஊடகங்களுக்கும் ஊடக சுதந்திரம் இருக்கும்படி செய்யப்படும்.
தேசிய கல்விக் கொள்கையில் மாநில அரசுகளுடன் ஆலோசித்து திருத்தம் மேற்கொள்ளப்படும். நாடாளுமன்றத்தில் பாஜக அரசு விவாதம் இன்றி நிறைவேற்றிய சட்டங்கள் மறு ஆய்வு செய்யப் படும். மாவட்டம் தோறும் அம் பேத்கர் பெயரால் நூலகங்கள் ஏற் படுத்தப்படும். 21 வயதுக்கு கீழே உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூபாய் 10,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். சமூக பொருளாதார ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத் தப்படும்.

பழங்குடியின பட்டியல் என இதர பிற்படுத்தப்பட்டோர் காலி பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப் பப்படும். பழங்குடியின, பட்டியலின, இதர பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கான கல்வி உதவித்தொகை இரு மடங்காக உயர்த்தப்படும் கட்சி தாவினால் சட்டமன்ற, நாடாளுமன்ற பதவிகள் பறிபோக சட்டம் திருத்தப்படும். காலியாக உள்ள 30 லட்சம் ஒன்றிய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்.

மனிதக் கழிவுகளை மனிதர் களே அள்ளும் நடைமுறை ஒழிக் கப்படும். ஒன்றிய அரசு பணிகளில் 50 சத வீதம் வரை பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படும். பா.ஜ.க.வின் ஜிஎஸ்டி முறை நீக்கப்பட்டு ஜிஎஸ்டி டு பாயிண்ட் ஜீரோ கொண்டுவரப்ப டும். மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்ட குறைகள் களையப்படும்.
மாற்றுத் திறனாளிகள் முதி யோர் பென்ஷன் ரூபாய் 1000 உயர்த்தப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். இப்படிப் பட்ட ஏராளமான நாளை மலர இருக்கும் சட்டங்கள் திட்டங்கள் இன்றைக்கு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையாக வழங்கப்பட்டிருக் கிறது. இந்த மாற்றம் ஆட்சி மாற்றத் திற்குப் பின்னால் மேற்கொள்ளப் பட வாக்காளர்களே, நீங்கள் வாக் களிக்க வேண்டிய சின்னம் இந்த தொகுதியில் உதயசூரியன். நமது வேட்பாளர் ஆ.ராசா… பெயருக்கு ஏற்ப ராசா ராசாதான். கொள்கை வீரர் மக்கள் நலத்தில் அக்கறை உள்ளவர்.
கடந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இதே தொகுதியில் இருந்து மக்கள் பாராட்டும்படி பணிகள் செய்தவர். நீலமலை மாவட்ட மக்களை அடிக்கடி நேரில் சந்தித்து குறைகளை அகற்றி நிறைகளை சாதித் தவர். மழை வெள்ள காலங் களில் மண் சரிவு காலங்களில் இந்தப் பகுதி மக்க ளுக்கு உதவ ஓடோடி வருபவர். நீலகிரி தொகுதியை செழுமையாக்குவதில் சிறந்தவர்.

போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி சுற்றுலா வளர்ச்சி போக்கை மென்மேலும் வளர்த் தெடுப்பவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி வீரர். முத் தமிழ் அறிஞர் கலைஞரின் நம்பிக் கையை பெற்றவர்.

இன்றைய முதலமைச்சர் தளபதியின் நம்பிக்கைக்கு உரியவர் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா கருத்துகளை, இலட்சியங்களை தன்னுடைய வாழ்க்கை நெறியாக கொண்டவர். இத்தனை சிறப்புகளை பெற்ற ஆ.இராசா அவர்களை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென தாய்க் கழகமான திராவிடர் கழ கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
அவர் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment