'திராவிட மாடல்' அரசை பின்பற்றும் கனடா மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 3, 2024

'திராவிட மாடல்' அரசை பின்பற்றும் கனடா மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி

featured image

சென்னை, ஏப்.3 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சி பொறுப்பேற்ற உடன் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அறிவித்தது. பின்னர் இந்த திட்டத்திற்கு என்று தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 15-9-2022 அன்று அண்ணா பிறந்த நாளில் இந்த திட்டத்தை மதுரையில் ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் 1,545 பள்ளிக்கூடங்களில் படிக்கும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர் களுக்கு காலை உணவு வழங்கப் பட்டது. பின்பு 28-.2.-2023 அன்று இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு, 1,005 நகர்ப்புற மய்யங்களில் 1,12,883 மாணவர்களுக்கும், 963 கிராமப்புற மய்யங்களில் 41,225 மாணவர்களுக் கும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டிலுள்ள 31,008 அரசு பள்ளிக்கூடங்களிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. மாண வர்களின் பசிப் பிணியை போக்கும் கருணை திட்டமாக அமைந்துள் ளது. இந்த மகத்தான திட்டத்தை பல்வேறு மாநில அரசுகளும் அமல்படுத்தத் தொடங்கியுள்ளன.

கனடாவில் தேசியப் பள்ளி உணவுத் திட்டம்
இந்நிலையில் திராவிட மாடல் அரசின் சாதனை திட்டமான காலை உணவு திட்டம் உலகெங்கும் பரவ தொடங்கியுள்ளது. கனடா நாட்டில் புதிய தேசிய பள்ளி உணவுத் திட்டம் தொடங்கப்பட் டுள்ளது. 4 லட்சம் குழந்தைகளுக்கு உணவை வழங்குவதை இலக்காகக் கொண்டு இத்திட்டம் அமல்படுத் தப்பட்டுள்ளது.
இது குறித்து கனடா நாட்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”குழந்தைகள் நன்கு கற்க, அவர்கள் வயிறார சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்குச் செல்லவேண்டும். கனடாவின் புதிய தேசிய பள்ளி உணவுத் திட்டம், குழந்தைகள் பசியுடன் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்யும். மேலும் ஒவ்வொரு மாணவரும் அவர்களின் கற்றல் திறனை சிறந்த முறையில் மேம்படுத்த இது பெரிதளவில் உதவும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

அப்போது அவர், அய்ந்து ஆண்டுகளில் $1 பில்லியன் முத லீட்டில், நிதி நிலை அறிக்கை 2024இ-ல் சேர்க்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், தற்போதுள்ள பள்ளி உணவுத் திட்டங்களை தாண்டி, ஒவ்வொரு ஆண்டும் மேலும் 4,00,000 குழந்தைகளுக்கு உணவை வழங்குவதை இலக்காகக் கொண்டு தொடங்கப்படும். குழந் தைகளுக்கு, இது ஆரோக்கியமான உணவைக் குறிக்கும். அவர்கள் கற் றுக்கொள்ளவும், வளரவும், அவர் களின் முழுத் திறனை அடையவும் உதவுகிறது. இது குழந்தைகளின் எதிர்காலத்திற்கான ஒரு தலைமுறை முதலீடாகும்.மேலும் ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களுக்குத் தேவையான உணவு இருப்பதை உறுதிசெய்ய, மாகாணங்கள் மற்றும் பிரதேசங்கள் மற்றும் பழங்குடியின கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றப் போகிறோம்.புதிய தேசிய பள்ளி உணவுத் திட்டம், மாகாணங்கள், பிரதேசங்கள் மற்றும் பழங்குடியினர் தங்கள் தற் போதைய பள்ளி உணவுத் திட் டங்களை விரிவுபடுத்தவும், நாடு முழுவதும் அதிகமான குழந்தைகள் தங்களுக்குத் தேவையான ஆரோக் கியமான உணவை அனுபவிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தவும் உதவும்.இந்தத் திட்டம் பெற்றோர் களுக்கும் குழந்தைகளுக்கும் நல்லது, பொருளாதாரத்திற்கும் நல்லது. இது குழந்தைகளின் உடல்நலம், கல்வி மற்றும் நல்வாழ்வை மேம் படுத்தும் அதே வேளையில், குடும் பங்களின் அழுத்தத்தைக் குறைத்து, நமது குழந்தைகளின் எதிர்காலத்தில் நேரடியாக முதலீடு செய்ய உதவும். இவ்வாறு ட்ரூடோ தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment