என்சிஇஆர்டி நூல்களில் பாபர் மசூதி இடிப்பு தகவல் நீக்கமாம்! பிளஸ் 2 பாடங்கள் மாற்றியமைப்பாம்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 9, 2024

என்சிஇஆர்டி நூல்களில் பாபர் மசூதி இடிப்பு தகவல் நீக்கமாம்! பிளஸ் 2 பாடங்கள் மாற்றியமைப்பாம்!!

புதுடில்லி,ஏப்.9 – புதிய மாற்றங்களு டன் 2024-2025 கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ பாடநூல்கள் தயாராகி வருகின்றன. ஒன்றிய அரசின் தேசி யக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன் சில் (என்சிஇஆர்டி) நூல்களில் பாபர் மசூதி இடிப்பு உள்ளிட்ட பல குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன. புதிதாக மாற்றியமைக்கட்ட தக வல்கள், பிளஸ் 2 சிபிஎஸ்இ பாடங்களில் நடப்பு ஆண்டு முதல் சேர்க்கப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேசம் அயோத்தியி லிருந்த பாபர் மசூதி டிசம்பர் 6, 1992-இல் இடிக்கப்பட்டது. இந்த இடத் தில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ராமன் கோயில் திறக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான முறையில் இக் கோயில் இன்னும் கட்டப்பட்டு வருகிறது. இதில் மசூதி இடிப்பு குறித்த வரலாற்று குறிப்புகள் பிளஸ் 2 வகுப்புக்கான அரசியல் அறிவியல் பாடப்பிரிவின் நூல்களில் இடம் பெற்றிருந்தன. பாபர் மசூதி-ராமன் கோயில் பிரச்சினைகள் நான்கு பக்கப் பாடங்களாக போதிக்கப் பட்டு வந்தன. தற்போது மசூதி இடிப்பின் குறிப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. என்சிஇஆர்டி யின் இணையதளத்தில் வெளியிடுள்ள அறிவிப்பில் இந்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்புக்கு பின்னர் மாணவர்கள் மீது கல்விச்சுமையை குறைக்கும் பொருட்டு இவை நீக் கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. ஒன்றிய அரசின் நிர்வாகத் திலான என்சிஇஆர்டி, அவ்வப் போது மாணவர்களின் பாடநூல் களில் தேவைக்கேற்ப மாற்றங்களை ஆராய்ந்து அளித்து வருகிறது. இவற்றை ஏற்று சிபிஎஸ்இ தனது பாடநூல்களில் மாற்றங்களை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. இந்த பாடங்களை ஆண்டுதோறும் நாடு முழுவதிலும் உள்ள சுமார் 4 கோடி மாணவர்கள் பயில்கின்றனர்.

இதேபோல், வரலாற்றுப் பாடத்திலும் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஹரப்பா நாகரிகம் மீதான இந்த பாடத்தில் ஆரியர்கள் வெளியிலி ருந்து வந்தவர்கள் அல்ல எனவும், அவர்களும் இந்தியாவின் பழங் குடிகளே எனும் வகையிலானக் கருத்து சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு, அரியானாவின் ராக்கிகர் எனும் இடத்தில் நடைபெற்ற அகழ் வராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் ஆதாரமாக்கப்பட்டு உள்ளன. ராக்கிகரின் ஆராய்ச்சிகள் முதன்முதலில் வெளியான போது அதை இடதுசாரி உள்ளிட்ட பெரும்பாலான வரலாற்றாளர்கள் ஏற்கவில்லை.
ஏனெனில், தமிழர்களான திரா விடர்களே ஹரப்பா நாகரிகத்தின் பூர்வகுடிகளாகக் இதுவரையும் கருதப்படுகின்றனர். இந்நிலையில், புதிய மாற்றங்களுடன் நடப்பு கல்வியாண்டு 2024-_2025க்கான சிபிஎஸ்இ பாடநூல்கள் தயாராகி வருகின்றன.

ஏற்கெனவே, என்சி இஆர்டி கடந்த காலங்களில் இந்துத்துவா அரசியல், 2002 -இல் குஜராத் மாநி லத்தில் நடைபெற்ற மதக்கல வரங்கள் மற்றும் சிறு பான்மையினர் மீதான பல குறிப் புகளும் நீக்கப்பட்டுள்ளன. கடந்த 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக் கின்படி நாட்டில் 14.2 சதவிகிதம் முஸ்லிம்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment