சோனியா காந்தி உள்பட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 5, 2024

சோனியா காந்தி உள்பட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்பு

புதுடில்லி,ஏப்.5- நாடாளுமன்றத் தின் மாநிலங்களவை (ராஜ்யசபை) பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 14 பேர் மாநிலங் களவை உறுப்பினர்களாக நேற்று (4.4.2024) பதவியேற்று கொண் டனர். இதற்கான நிகழ்ச்சி புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முறைப்படி நடைபெற்றது. இதில், குடியரசு துணை தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவரான ஜெக தீப் தங்கார் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

இதன்படி, காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 14 பேர் உறுப் பினர்களாக பதவியேற்று கொண் டனர். இதில், சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து உறுப்பின ராகி உள்ளார். ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ் ணவ் ஒடிசாவில் இருந்து தேர்ந் தெடுக்கப்பட்டு உள்ளார்.
இதேபோன்று காங்கிரஸ் மூத்த தலைவரான அஜய் மேக்கன் கருநாடகாவில் இருந்தும், பா.ஜ.க. வின் மூத்த தலைவரான ஆர்.பி. என். சிங் உத்தரப்பிரதேசத்தில் இருந்தும், பா.ஜ.க. உறுப்பினர் சமீக் பட்டாச்சார்யா மேற்கு வங் காளத்தில் இருந்தும் பதவியேற்று கொண்டனர்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி யின் தலைவர்களான கோலா பாபு ராவ், மேத ரகுநாத் ரெட்டி மற்றும் எரும் வெங்கட சுப்பாரெட்டி ஆகியோர் ஆந்திர பிரதேசத்தில் இருந்து பதவியேற்று கொண்டனர். இதன்பின் அவர்கள் அனைவரும் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்காருடன் சேர்ந்து ஒன்றாக குழு ஒளிப்படம் ஒன்றும் எடுத்து கொண்டனர்.
சோனியா காந்தி முதன்முறை யாக மாநிலங்களவை உறுப்பின ராகி உள்ளார். அவர், அவை தலைவர் பியூஷ் கோயல், காங்கிரஸ் தலை வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவ ரான மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் பதவி யேற்று கொண்டார். இந்த பதவிப் பிரமாண நிகழ்ச்சியின்போது, அவருடைய மகள் பிரியங்காக காந்தியும் கலந்து கொண்டார். துணை தலைவர் ஹரிவன்ஷ் மற்றும் பொது செய லாளர் பி.சி. மோடி ஆகியோரும் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment