கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 7, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

7.3.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* அரசியலில் நீதிபதிகள் பதவி விலகியவுடன் சேருவது குறித்த விதிமுறைகள் தேவை என்கிறது தலையங்க செய்தி.
* பாஜகவுடன் நவீன் பட்நாயக்கின் பி.ஜே.டி. கட்சி கூட்டணி அமைத்திட ரகசிய பேச்சுவார்த்தை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* ஒன்றியத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பத்திரங்களை வாங்குபவர்களின் பெயர்களை வெளியிட விரும்பவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
*  தேர்வு நாளில் பல்கலைக்கழகம் வினாத்தாளை தயாரிக்க மறந்து விட்டதாம். டபுள் எஞ்சின் சர்க்கார் பாஜக ஆளும் ம.பி.யில் கூத்து – தேர்வு எழுத வந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* விவசாயிகளின் மறியல் ‘நாடு முழுவதும்’ என்கிறார் விவசாயி தலைவர் சர்வான் சிங் பாந்தர் தலைவர்; உலோகத் துகள்களால் சுப்கரன் சிங் மரணம் என குற்றச்சாட்டு. அனைத்து மாநில விவசாயிகளும் ஜந்தர் மந்தரில் எந்த வழியிலும் வந்து ஆர்ப்பாட்டம் செய்ய அழைப்பு.
தி டெலிகிராப்
* மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ஆளும் கட்சி “பதற்றம்” காரணமாகவே உத்தரப் பிரதேசத்தில் யோகி தலைமையிலான பாஜக அமைச்சரவை விரிவாக்கம் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சனம்.
* ராஞ்சியில் பாஜக நாடாளுமன்ற வேட்பாளரின் உருவப் பொம்மை எரிப்பு. பாஜகவிற்கு பின்னடைவு. பொதுத்துறை நிறுவனமான ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் (எச்இசி) யில் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்கள், பாஜக மக்களவை வேட்பாளரின் உருவ பொம்மையை நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்க உறுதி.
– குடந்தை கருணா

No comments:

Post a Comment