செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 4, 2024

செய்திச் சுருக்கம்

அதிகரிப்பு
பொறியாளர், சுகாதார ஆய்வாளர், வரைவாளர், பணி ஆய்வாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான நேரடித் தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கை 2,455 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.
அவகாசம்
இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வில் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றம் செய்ய மார்ச் 15 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டி ருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
வெளியீடு
குரூப்-4 போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளின் தொகுப்பான ‘டிஎன்பிஎஸ்சி தேர்வு – குரூப் 4′ எனும் வழிகாட்டி நூல் வெளியிடப் பட்டது.
மகளிருக்கு…
உலக மகளிர் நாளை முன்னிட்டு ‘டாக்டர் அகர்வால்ஸ்’ கண் மருத்துவமனையில் 15 நாள்களுக்கு பெண்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
வேலைவாய்ப்பு
சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள தேசிய சிறுதொழில் கழக அலுவலகத்தில் 6.3.2024 அன்று காலை 9.30 மணிக்கு வேலைவாய்ப்பு கண்காட்சி தொடங்குகிறது. இதில், வேலை தேவைப்படுபவர்கள் மற்றும் புதிதாக டிகிரி முடித்தவர்கள் பங்கேற்கலாம். என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
போலியோ
தமிழ்நாடு முழுவதும் 43,051 மய்யங்களில் நேற்று (3.3.2024) நடந்த முகாமில், 5 வயதுக்கு உட்பட்ட 56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட்டது.
அழைப்பு
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத்த தாக்கீது விவகாரம் குறித்து மார்ச் 6ஆம் தேதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கங் களுக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு.
உத்தரவு
வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதியான தலைமை ஆசிரியர் பட்டியலை மார்ச் 15ஆம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
பயன்பாடு
இந்திய நகரங்கள், கிராமங்களில் புகையிலை, போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதாக ஒன்றிய அரசின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இலக்கு…
உலகின் மொத்த பால உற்பத்தியில் இந்தியாவின் பங்கு தற்போது 24 சதவீதமாக உள்ளதை 2030ஆம் ஆண்டுக்குள் 30 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment