இதுதான் கடவுள் சக்தி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 22, 2024

இதுதான் கடவுள் சக்தி!

கடத்தப்பட்ட கடவுள்களை காப்பாற்றிய காவல்துறை

சென்னை, மார்ச் 22- மதுரை, புதுக்கோட்டை, விழுப் புரம் ஆகிய பகுதிகளில் கடத்தி பதுக்கி வைக் கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழை மையான 6 சுவாமி சிலை கள் மீட்கப்பட்டன. சிலைக் கடத்தலில் ஈடு பட்டதாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம், விளாங்குடி செம்பருத்தி நகரில் உள்ள பிலோ மின்ராஜ் என்பவரது வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழை மையான சுவாமி சிலை கள் கடத்தி பதுக்கி வைக் கப்பட்டிருப்பதாக தமிழ் நாடு காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையின ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் விரைந்து சென்று சோதனை நடத் தினர்.

அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டி ருந்த விநாயகர் சிலை பறி முதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பிலோ மின்ராஜ், அவரது கூட் டாளிகள் ஜோசப் கென் னடி, டேவிட், அன்புரா ஜன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசார ணையில், இச்சிலையா னது விளாங்குடி விசா லாட்சி மில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோயி லிலிருந்து திருடப்பட் டது தெரியவந்தது.
இதேபோல், புதுக் கோட்டை ஆலத்தூர் சந்திப்பில் வாகன தணிக் கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட பழை மையான அம்மன் சிலை பறிமுதல் செய்யப்பட் டது.

இது தொடர்பாக காரைக்குடி அஜித், கோவில்பட்டி சீறிராம், விருதுநகர் அகமது ஆகிய 3 பேர் கைது செய் யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட் டம் புலிச்சப்பள்ளம் என்ற இடத்தில் செல்வ குமார்என்பவரது வீட் டில் சோதனை நடத்திய போது அங்கிருந்து 3 பெருமாள் உலோகச் சிலைகள், ஓர் அனுமன் சிலை (ராமர் மற்றும் லட்சுமணரை தோளில் ஏந்திய சிலை) மற்றும் ஒரு திருவாச்சி கைப்பற் றப்பட்டது. இதில், தொடர்புடையதாக பாரதிதாசன், நிசார், அகஸ்டின், முத்துகிருஷ் ணன் ஆகிய 4 பேர் கைது செய்ப்பட்டனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிந்துள்ள சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கைது செய் யப்பட்ட 11 பேரிடமும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பறிமுதல் செய் யப்பட்ட சிலைகளை பாதுகாப்பாக வைத்துள் ளனர்.

No comments:

Post a Comment