கழகக் களங்களில்...‘இந்தியா' கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? - அயன்புரத்தில் பிரச்சாரக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 5, 2024

கழகக் களங்களில்...‘இந்தியா' கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? - அயன்புரத்தில் பிரச்சாரக் கூட்டம்

featured image

சென்னை, மார்ச் 5- வடசென்னை மாவட்ட கழக இளைஞரணி சார்பில் ‘இந்தியா’ கூட்டணி வெல்ல வேண்டும் – ஏன்? விளக்க தொடர் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங் களின் முதற் கூட்டம் 3.3.2024 அன்று அயன் புரம் நெட்டா முத்தியால் கான் (என்.எம்.கே.) தெருவில் சிறப்பாக நடைபெற்றது.
அயன்புரம் பகுதி தலைவர் சு.துரைராசு தலைமை வகித்துப் பேசினார். வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச் செல்வன் தொடங்கி வைத்து அனைவ ரையும் வரவேற்றார்.
தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தென்சென்னை மாவட்ட துணைச் செயலா ளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், வட சென்னை மாவட்ட காப்பாளர் கி.இராம லிங்கம், பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணே சன், செம்பியம் கழக தலைவர் ப.கோபால கிருஷ்ணன், கொடுங்கையூர் தலைவர் கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி முன்னிலை வகித்தனர்.
தொடர் பிரச்சாரக் கூட்டங்களின் ஒருங் கிணைப்பாளர், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் நிகழ்ச்சியை சிறப்பான வகையில் ஒருங்கி ணைத்தார்.
திராவிடர் கழக கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் சிறப்புரையாற்றினார்.
திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ் ஆகியோர் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி தமிழ்நாட்டுக்கு செய்யும் வஞ்சகத்தை விளக்கிப் பேசினர்.

வழக்குரைஞர் பா.மணியம்மை
வழக்குரைஞர் பா.மணியம்மை உரை யாற்றும்போது, ரூ.3000 கோடிக்கு படேலுக்கு சிலை, குழந்தை இராமர் சிலை திறப்பு என்று மதவெறி பிடித்து அலைகின்ற பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் எங்கே? இந்து – இசுலாமியர் – கிறித்துவர் என்றும், உயர் ஜாதி – ஏழை இந்து என்றும் பிரிவினை ஏற்படுத்தி மதத்தின் பெயரால் வேட்டையாடு கிறவர்கள் நடத்துகின்ற ஆட்சியில், விலை வாசி உயர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போது சமையல் எரிவாயு என்ன விலைக்குக் கிடைத்தது? இப்போது பெட்ரோல் – டீசல் விலை என்ன?
உள்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. வெளிநாடுகளுக்குச் செல்லுகின்ற மோடி அங்குள்ள பெண் அதிபர்களோடு – பிரதமர் களோடு கைகுலுக்கி, ஜாலியாகப் பேசிக் கொண்டு பெண்கள் உரிமை குறித்தும் முழங்குகிறார். பா.ஜக.வினரிடமிருந்துதான் பெண்களைக் காப்பாற்ற வேண்டும் என் கின்ற நிலை இந்தியாவில் இன்று ஏற்பட்டு உள்ளது.
பணக்காரர்கள் மீது தனி அக்கறை காட்டுகின்ற பா.ஜ.க. ஆட்சியில் 3, 5ஆம் வகுப்பில் படிக்கின்ற குழந்தைகளுக்குக் கூட நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் புதிய கல்விக் கொள்கையின் பெயரால் ஏற்பட்டுள்ளது. குருகுலக் கல் வியை கொண்டு வந்துள்ளனர்.
மாடு மேய்த்தவர்களை அய்.ஏ.எஸ். ஆக்கியது இந்த மண் – பெரியார் மண் -தமிழ்நாடு!
பா.ஜ.க.விற்கு ஓட்டுப்போட நீங்கள் நினைத்தால் – மணிப்பூர் கலவரம், குஜராத் தில் நடைபெற்ற கொடுமை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, ரூ.1-க்கு 29 காசுகள் மட்டுமே தமிழ்நாட்டுக்குத் திரும்பிக் கொடுக்கின்ற கயமை, நீட் தேர்வு, விவசாயிகள் நடத்தி வருகின்ற போராட்டம் ஆகியவை உங்கள் கண் முன்பு நிச்சயம் தோன்றும். ஆகவே வருகின்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியே வெற்றி பெற வேண்டும் என்றார்.

முனைவர் அதிரடி க.அன்பழகன்
முனைவர் அதிரடி க.அன்பழகன் சிறப்பு ரையாற்றும்போது, கடந்த மாதம் 24ஆம் தேதியன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாநில கழக இளைஞரணி கலந்து ரையாடல் கூட்டத்தில் கூறியதற்கேற்ப இந்தக் கூட்டம் எழுச்சிகரமான வகையில் இங்கே நடைபெறுகின்றது.
தி.மு.க. ஒழிந்து விடும், தி.மு.க. ஆட்சியை ஒழித்தே தீருவோம் என்கின்ற மோடியின் ஆணவப் பேச்சுக்கு நாம் பதில் கூறி நேரத்தை ஒழிக்கத் தேவையில்லை. 100 ஆண்டு வரலாற்று தொடர்ச்சியைப் பெற் றுள்ள தி.மு.க. மக்கள் அமைப்பு – மக்கள் இயக்கம், மக்கள் வாக்கைப் பெற்று ஆட் சிக்கு வந்த இயக்கம் தி.மு.க. 40 விழுக்காடு மக்களின் ஆதரவைக் கூட பெறாமல் ஆட் சிக்கு வந்துள்ளவர்கள் தான் பா.ஜ.க.வினர். காவல்துறை, சிபிஅய், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றினால் மிரட் டல் விடுத்து, எதிர்க்கட்சியினரை இணங்க வைத்தும், விலைக்கு வாங்கியும், ஓட்டு மிசினை நம்பியும் ஆட்சி அமைப்பதுதான் பா.ஜ.க.வின் வாடிக்கை.
நம்மைப் பார்த்து “ஆண்ட்டி இண்டியன்’ என்பவர்கள் ஆட்சிக் காலத்தில் தான் “போண்டி இண்டியன்” என்று சொல்லும் அளவுக்கு மக்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமது 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பைத் தவிர்த்து – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினருக்கு பதில் தராதவர்தான் பிரதமர் மோடி. தான் ஆட்சி நடத்திய போது 117 முறை செய்தி யாளர்களிடம் பல கேள்விகளுக்கு அறிவுத் திறனோடு பதில் கூறிய பிரதமர்தான் டாக்டர் மன்மோகன் சிங்.

நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவின் போதும், அயோத்தியில் இராமர் கோவில் திறப்பின் போதும் ஸநாதன வெறி யோடு இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவையே அவமதித்த வர்ணா சிரம வெறிக் கூட்டம் தான் பா.ஜ.க.வினர்.
ஒரே நாடு – ஒரே மதம் – ஒரே மொழி என்று கூப்பாடு போடுகின்றவர்கள் ஒரே ஜாதி என்று சொல்வார்களா?
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்னும் போது கோவில் கட்டுவதா உங்கள் வேலை? உச்சநீதிமன்றத் தீர்ப்புப் படி மசூதி எப்போது கட்டித் தருவீர்கள்?
அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேட் டால் சென்னை தலைநகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது உடனே நிவாரணம் கொடுத்திருக்க வேண்டாமா? அது பற்றிப் பேச்சே இல்லை. அதனால் தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “நாங்கள் உங்க அப்பன் வீட்டுப் பணத்தைக் கேட்கவில்லை” என்றார்.
தமிழ்நாடு மட்டுமல்ல, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை இந்தியாவே புறக்கணிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எங்கெல்லாம் எதிர்க்கட்சி ஆட்சி நடத்து கின்றதோ அங்கெல்லாம் மக்கள் நலத் திட் டங்களுக்கு ஒன்றிய அரசு பணம் ஒதுக்குவ தில்லை.
தி.மு.க.வை மிரட்டிப் பார்த்தார்கள். ஆனால் இன்று தமிழ்நாட்டில் அமலாக்கத் துறை அதிகாரியே வசமாக சிக்கிக் கொண்ட நிலைதான் ஏற்பட்டுள்ளது.
திராவிட இயக்கம் எஃகுக் கோட்டை. பெரியார் தத்துவத்தின் மீது கட்டப்பட்ட கோட்டை.
இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் பெற்று வெற்றி அடையும். மோடியின் பா.ஜ.க. ஆட்சி ஒழிக்கப்படும் என்று குறிப் பிட்டார்.

கலந்துகொண்டோர்
மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் சி.பாசுகர், மாவட்ட ப.க. அமைப்பாளர் பா.இராமு, எருக்கமாநகர் கழக அமைப்பாளர் சொ.அன்பு, கண்ண தாசன் நகர் அமைப்பாளர் க.துரை, மங்கள புரம் கழக அமைப்பாளர் மா.டில்லிபாபு, வழக்குரைஞர்கள் சி.உதயபிரகாஷ், எம்.எஸ்.ஆதில், ஊடகவியலாளர் வி.ஜோதி ராமலிங்கம், கே.கவிதா, ஆவடி மாவட்ட துணைத் தலைவர் வை.கலையரசன், ச.சென்னகிருஷ்ணன், கொரட்டூர் பகுத்தறிவுப் பாசறை அமைப்பாளர் இரா.கோபால், க.செல்லப்பன், இளைஞரணித் தோழர்கள் பூவரசன், யுகேஷ், இந்திரஜித், சி.பி.அய்.எம். தோழர் ஏ.எல்.மனோகரன், படப்பை செ.சந் திரசேகரன், மற்றும் தோழர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
முனைவர் க.அதிரடி அன்பழகனுக்கு அயன்புரம் தலைவர் சு.துரைராசு பயனாடை அணிவித்தார். 96ஆவது வட்ட தி.மு.க. செயலாளர் ச.மனோகரனுக்கு தே.செ.கோபால் பயனாடை அணிவித்து சிறப்பித்தார். சிறப்புரையாற்றிய முனைவர் க.அதிரடி அன்பழகன், வழக்குரைஞர் பா.மணியம்மை ஆகியோருக்கு தங்க.தனலட்சுமி இயக்க வெளியீடுகள் உள்ளிட்ட நூல்களை வழங்கி – பயனாடை அணிவித்து சிறப்பித்தார். என்.எம்.கே. தெருவில் கழகக் கொடிக் கம்பங்கள் ஆங்காங்கே அமைக்கப் பட்டிருந்தன.
சி.கணேசன், அப்துல் சலீம் ஆகியோர் அனைவருக்கும் தேநீர் வழங்கினர். தோழர் களுக்கு இரவு சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.
நிறைவாக வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் பா.பார்த்திபன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment