காங்கிரஸ் வெளியிட்ட மூன்றாவது வேட்பாளர் பட்டியல் புதுச்சேரியில் வைத்திலிங்கம் போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 22, 2024

காங்கிரஸ் வெளியிட்ட மூன்றாவது வேட்பாளர் பட்டியல் புதுச்சேரியில் வைத்திலிங்கம் போட்டி

featured image

புதுடில்லி, மார்ச் 22 மக்களவைத் தேர்தலை முன்னிட்டுகாங்கிரஸ் சார் பில் 3-ஆவது வேட்பாளர் பட்டியல் நேற்றிரவு (21.3.2024) வெளியிடப் பட்டது. இதில் 57 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதன்படி புதுச்சேரி தொகுதியில் எம்.பி. வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிடுகிறார்.
மேற்குவங்கத்தில் 8 மக்களவைத் தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட் பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் அந்த கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிர்காம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். தெலங் கானாவில் 5 தொகுதிகள், ராஜஸ்தானில் 6 தொகுதிகள்,மகாராட்டிராவில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
கருநாடகாவில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

அந்த கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ணா, குல்பர்கா தொகுதியில் போட்டியிடுகிறார். குஜ ராத்தில் 11 தொகுதிகள், அருணாச்சல பிரதேசத்தில் ஒரு தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். காங்கிரஸ் வெளியிட்ட 3-வது பட்டியலில் மொத்தம் 57 வேட் பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 56 பேர் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆவர். ஒரு தொகுதி கூட்டணி கட்சியின் வேட்பாளர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment