பார்ப்பனரல்லாதாரின் கடமையென்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 21, 2024

பார்ப்பனரல்லாதாரின் கடமையென்ன?

சமூக வலைதளத்தில் வெளி வந்த செய்தி இதோ ஒன்று.

“அன்பான பிராமண சொந்தங்களே!

நீங்கள் எந்த பிராமண சங்கங்களில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இம்முறை விழித்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையுடன் செயல்பட்டு வாக்களியுங்கள். சுமார் 19 தொகுதிகளில் உங்கள் ஆதரவு இல்லாமல் யாராலும் வெற்றி பெற இயலாது.

கீழ்க்கண்ட பகுதிகளில் எத்தனைப் பிராமண வாக் குகள் உள்ளன (approx) என்பதையும் சுட்டிக்காட்டி யுள்ளேன்.
இனியும் சுதாரித்து வாக்களிக்கா விட்டால்,சுடுகாட்டில் கூட நமக்கு இடம் கிடைக்காது. ஆகையால் எல்லா மக்களையும் ஒன்றாக அணைத்துச் செல்லும் இந்தியாவின் மாமன்னன் மோடிஜியின் கரங்களை பலப்படுத்த பாஜகவுக்கு வாக்களியுங்கள்.

மயிலாப்பூர் – 85,000, தியாகராயர் நகர் – 80,000, ஆலந்தூர் – 75,000, வேளச்சேரி – 70,000, விருகம்பாக்கம் – 60,000, பல்லாவரம் – 50,000, தாம்பரம் – 50,000, சோழிங்கநல்லூர் – 1,00,000, சைதாப்பேட்டை – 40,000, அம்பத்தூர் – 45,000, சேப்பாக்கம் – 20,000, மதுரவாயில் – 40,000, சிறீரங்கம் – 70,000, திருச்சி – 60,000, கும்பகோணம் – 1,00,000, தென்காசி – 40,000, திருநெல்வேலி – 50,000, கோவை தெற்கு – 50,000, காஞ்சிபுரம் – 50,000

இந்த தொகுதிகளில் பிராமணர்கள் மற்றும் நமக்கு ஆதரவு தரும் பாஜக வேட்பாளர்கள் யாரை நிறுத்து கிறார்களோ அந்த கட்சிக்கு வாக்களியுங்கள். இல்லை யெனில் ஒரு பிராமணரை சுயேச்சை ஆக நிறுத்தி வாக்களியுங்கள். ஒற்றுமையாக. வாக்களித்து, உங்கள் சக்தியை நிரூபித்துக் காட்டுங்கள். அதன் பிறகு மாற் றத்தைப் பாருங்கள். உங்களை எள்ளி நகையாடும் கட்சிகள் உங்கள் பின்னால் வருவர்.”

– பிரகாஷ்ராவ், அம்பத்தூர், சமூக சேவகர்.

சமூக வலைதளத்தில் இப்படி ஒரு செய்தி பரப்பப்படு கிறது. இதைப் படிக்கும்போது நூற்றுக்கு 97 விழுக்காடுள்ள பார்ப்பனரல்லாதவர்கள் எந்த முடிவுக்கு வர வேண்டும்?
எந்த நோக்கத்துக்காக நூற்றுக்கு மூன்று பேராக உள்ள ஒரு கூட்டம் பிஜேபிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுகிறதோ, கருதுகிறதோ, அந்த நோக்கங் களுக்காகவே பார்ப்பனரல்லாதார் பிஜேபி கூட்டணியின் எதிர் அணியான ‘இந்தியா’ கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருவதுதான் சரியானதாக – சிந்தனை ரீதியான – தர்க்க ரீதியானதாக (Logic) இருக்க முடியும்!

பாரதீய ஜனதா என்றால் அதன் பொருள் பார்ப்பன ஜனதா தானே! எடுத்துக்காட்டாக இடஒதுக்கீட்டில் பொருளாதார ரீதியான அளவுகோல் கூடாது என்பது அரசமைப்புச் சட்டத்தின் நிலைப்பாடு!

பல நீதிமன்றங்களும் அந்த வகையில்தான் தீர்ப்புகளையும் வழங்கியுள்ளன.
ஆனால், பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதி யினருக்கு (ஆண்டு வருமானம் ரூபாய் எட்டு லட்சம் வந்தால் இவர்கள் ஏழைகளாம்) 10 விழுக்காடு இட ஒதுக்கீடு (EWS) என்று அவசர அவசரமாக சட்டம் நிறைவேற்றியது – ஒன்றிய பிஜேபி அரசுதானே!

‘நீட்’ செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் மறு சீராய்வு மனு போட்டு உச்சநீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பைப் பெற்றதும் ஒன்றிய பிஜேபி அரசுதானே!
‘நீட்’ வந்த பிறகு சிபிஎஸ்இ வழி படித்தவர்கள்

20 மடங்கு அதிக இடங்களை கைப்பற்றினார்களே!
மேலும் மேலும் பற்பல காரணங்களால் ஒன் றிய பிஜேபி ஆட்சியால் பலன் பெற்றவர்கள் பா.ஜ. க.வுக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதற்கு எதிரான முடிவை எடுப்பதே பார்ப்பனரல்லா தாரின் அடிப்படைக் கடமை என்பதை மறவாதீர்! மறவாதீர்!!

No comments:

Post a Comment