முனைவர் துரை.சந்திரசேகரன் எழுதிய நூல்களை வெளியிட்டு நிலவு பூ.கணேசன் நூற்றாண்டில் படத்தினை திறந்துவைத்து தமிழர் தலைவர் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 20, 2024

முனைவர் துரை.சந்திரசேகரன் எழுதிய நூல்களை வெளியிட்டு நிலவு பூ.கணேசன் நூற்றாண்டில் படத்தினை திறந்துவைத்து தமிழர் தலைவர் உரை

featured image

சென்னை,மார்ச் 20- திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் எழுதி யுள்ள ‘மனித உரிமைக் காவலர் தந்தைபெரியார்’, ‘The Human Rights Defender Thanthai Periyar’ ஆகிய புத்தகங்கள் மற்றும் திராவிட செம்மல் நிலவு பூ.கணேசன் நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா திராவிடர் கழகம் சார்பில் நேற்று (19.3.2024) மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது.
விழா தொடக்க நிகழ்வாக பகுத்தறிவு பாடல் இசை நிகழ்ச்சியை பகுத்தறிவு பாடகர் பேராசிரியர் திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினர் வழங்கினர்.
கழக பொருளாளர் வீ.குமரேசன் அனைவரையும் வரவேற்றார். வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பொறி யாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பொறியாளர் பழ.சேரலாதன், க.செல்வமணி, சோ.முல் லையப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையேற்று நூல் திறனாய்வு செய்து உரை யாற்றினார்.
திராவிட செம்மல் நிலவு பூ.கணேசன் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது படத்தை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்துவைத்து, புத்தகங்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திமுக மாணவரணி மாநில செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ‘மனித உரிமைக் காவலர் தந்தைபெரியார்’ நூலின் முதல் பிரதியை தமிழர் தலைவர் ஆசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டு உரையாற்றினார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் ‘The Human Rights Defender Thanthai Periyar’ நூலின் முதல் பிரதியை ஆசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டு உரையாற்றினார்.
திராவிடர் இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு திராவிட செம்மல் நிலவு பூ.கணேசன் நூற்றாண்டு விழா மலரை ஆசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டு உரையாற்றினார்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆய்வுரை வழங் கினார்.

பாராட்டு

நூலாசிரியர் முனைவர் துரை.சந்திரசேகரன்- கலைச் செல்வி இணையருக்கும், நிலவு பூ.கணேசன் மகன் க.செல்வமணி – லதா இணையருக்கும் கழகத் தலைவர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
மலர் தயாரிப்புப்பணியை மேகொண்ட சண்முக நாதன் மற்றும் விழாவில் பங்கேற்று உரையாற்றிய சிறப்பு விருந்தினர்களுக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
நிலவு பூ.கணேசன் குடும்பத்தினர் தமிழர் தலைவர் ஆசிரியர் உள்ளிட்ட அனைவருக்கும் சிறப்பு செய் தார்கள்.
கழகத் துணைத் தலைவருக்கு முனைவர் துரை.சந்திரசேகரன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
நூலாசிரியர் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஏற்புரை ஆற்றினார்.
கழக துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.
காம்ரேடு பதிப்பகம் காஞ்சி பிரபாகரன் நன்றி கூறினார்.
‘மனித உரிமைக் காவலர் தந்தைபெரியார்’,’The Human Rights Defender Thanthai Periyar’ ஆகிய புத்தகங்கள் விலை ரூ.470. விழாவில் ரூ.400க்கு வழங்கப்பட்டது.

புத்தகங்கள் பெற்றுக்கொண்டோர்

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், இரா.தமிழ் செல்வன், சி.அமர்சிங், ச.இன்பக்கனி, வே.பாண்டு, தே.செ.கோபால், விழிகள் வேணுகோபால், ஆ.வீரமர்த் தினி, சே.மெ.மதிவதனி, பா.மணியம்மை, தங்க.தன லட்சுமி, செ.பெ.தொண்டறம், ராமண்ணா, க.தமிழி னியன், ஏழுமலை, பழ.சேரலாதன், புலவர் ராவணன், பாவேந்தர்விரும்பி, மு.ரா.மாணிக்கம், கோ.நாத்திகன், தமிழ்மணி, மணிவேல், அன்புசெல்வன், உடுமலை வடிவேல், பசும்பொன் உள்பட பலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.

புலவர் பா.வீரமணி, வழக்குரைஞர் சு.குமாரதேவன், தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், ஆ.வெங்கடேசன், மா.செல்வராஜ், செல்வபொன் கணபதி, சித்த மருத்துவர் திருத்தணிகாசலம், வாலாஜா வல்லவன், இரா.வில்வநாதன், வெ.முமோகன், சி.வெற்றி செல்வி மற்றும் துரை.சந்திரசேகரன் குடும்பத்தார், நிலவு பூ.கணேசன் குடும்பத்தார், கழகப் பொறுப்பாளர்கள், திமுக, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொறுப்பாளர்கள் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment