கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 21, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

21.3.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை:
♦ பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு விலக்கு, சமூக நீதி உள்ளிட்டவைகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ பீகாரில் ஜன் அதிகார் கட்சியின் தலைவர் பப்பு யாதவ் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததோடு தனது கட்சி யையும் காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
♦ இதேபோல் உத்தரப்பிரதேசத்தின் அம்ரோகா மக்களவை தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பியான டேனிஷ் அலி டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ திரிபுராவில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக இந்தியக் கட்சிகள் உட்பட 8 கட்சிகள் கூட்டுப் பிரச்சாரத்தில் ஈடுபட முடிவு.
♦ டில்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட ஜக்கிக்கு அவசர ‘மூளை அறுவை சிகிச்சை’ செய் யப்பட்டது,
♦ ஒரே நாடு ஒரே தேர்தல் யோசனை, அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டுமானத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு பரிட்சை போன்றது என்கிறார் உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ராஜூ ராமசந்திரன்.
♦ திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார். ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கருநாடக தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தல்

தி இந்து:
♦ தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு ஆதரவாகவும், தனது கட்சியின் பிரசாரங்களுக்கு நிதி அளிப்பதற்காகவும் பிரதமர் மோடியால் வளர்க்கப்பட்ட ‘நரேந்திர மோடியின் கோடீஸ்வரர்கள் ராஜ்ஜியம்’, பிரிட்டிஷ் ஆட்சியில் இருந் ததை விட இன்றைய மோடி ஆட்சியில் ஏழை- கோடீஸ் வரர்கள் இடையே ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்

டைம்ஸ் ஆப் இந்தியா:
♦ ரூ.1,344 கோடியில், மும்பையில் உள்ள 66 நிறுவ னங்கள் அனைத்து தேர்தல் பத்திரங்களில் 11% வாங்கி யுள்ளன.

– குடந்தை கருணா

No comments:

Post a Comment