முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு அஞ்சல் வழியில் வாக்களிக்க விருப்பப் படிவம் இன்று முதல் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 20, 2024

முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு அஞ்சல் வழியில் வாக்களிக்க விருப்பப் படிவம் இன்று முதல் வழங்கல்

featured image

தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை,மார்ச் 20- தமிழ்நாட் டில் தேர்தல் முன்னேற்பாடுகள், புகார்கள், நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று (19.3.2024) செய் தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் தற்போது 68,320 வாக்குச் சாவடிகள் உள் ளன. தேர்தல் நடத்தை விதிகள் மீறல் அடிப்படையில், 1 லட்சத்து 91,291 அளவிலான அரசுக்கு சொந்தமான பொதுச் சொத்துக் களில் எழுதப்பட்டி ருந்த அரசி யல் கட்சிகள் தொடர்பான விளம்பரங்கள், வைக்கப்பட்டி ருந்த பதாகைகள், சுவரொட்டிகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டுள் ளன. அதேபோல் 52,938 தனி யார் இடங்களிலும் அகற்றப்பட் டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் உரிமம் பெற்ற 13,556 துப்பாக்கிகள் காவல் துறையில் ஒப்படைக்கப் பட்டுள்ளன. மேலும், 71 துப் பாக்கி உரிமங்கள் முடக்கப்பட் டுள்ளன.

87 துப்பாக்கி உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக 11,828 வழக்குகள் பதியப் பட்டுள்ளன. 10,434 பேரிடம் இருந்து பிரமாணப் பத்திரம் பெறப்பட்டுள்ளது.
293 பிடிவாரண்ட்கள் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன. சிவிஜில் செயலி மூலம் இதுவரை 282 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 85 வய துக்கு மேற்பட்ட மூத்த வாக்கா ளர்கள், மாற்றுத்திறனாளி வாக் காளர்களுக்கு அஞ்சல் வாக்கு வசதி ஏற்படத்தப்பட்டுள்ளது.
அவர்கள் தொடர்பான விவ ரங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு வழங்கப்பட்டுள் ளன. அந்த பட்டியலில் உள்ள வர்களின் வீடுகளுக்கு இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை அலுவலர்கள் சென்று அஞ்சல் வாக்குக்கான விருப்ப படிவம் (படிவம்12டி) பெறுவார்கள்.

இது கட்டாயமல்ல; விரும்பி யவர்கள் மட்டும் படிவத்தை பூர்த்தி செய்து தரலாம்.
அதன்பின், வாக்குப்பதிவுக்கு முன்னதாக, விருப்பப் படிவம் தந்தவர்களிடம் சம்பந்தப்பட்ட அலுவலர், வருவாய், காவல் துறையினர் குழுவாக சென்று, அஞ்சல் வாக்குப் படிவத்தை தந்து, வாக்கு பதிவு செய்த பின், அந்த படிவத்தை பெட்டியில் போடுவார்கள்.
அதன்பின், இவ்வாறாக பெறப்படும் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டி, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் குறிப் பிட்ட காலத்துக்குள் ஒப்படைக் கப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரிக்கும் பணி தொடங்குகிறது. முதலில் இயந் திரங்களின் எண்களை கணினி யில் பதிவு செய்து, ஒரு மக்களவை தொகுதியில் உள்ள சட்டப் பேரவை தொகுதி வாரியாக பிரிக்கப்படும்.
அதன்பின், வாக்குச்சாவடி வாரியாக மீண்டும் பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக ளுக்கு அனுப்பப்படும். இப்பணி கள் முழுமையாக அரசியல் கட்சி பிரதிநிதிகளின் பார்வை யில் நடைபெறும்.
தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவிதேர்தல் நடத்தும் அலுவ லர்களுக்கான பயிற்சி முன்னரே முடிந்துவிட்டது.

இனி, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி, வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின் தொடங்கப்படும்.
‘ பூத் சிலிப்’ பொறுத்தவரை, வரும் மார்ச் 30ஆம் தேதி அச்சிடும் பணி தொடங்கப்படும். வாக்குப்பதிவு நாளுக்கு 5 நாட் களுக்கு முன்னதாக வாக்காளர் களுக்கு முழுமையாக விநி யோகிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவை பேரணி: தொடர்ந்து, கோயம்புத்தூரில் நேற்று முன்தினம் (18.3.2024) பிரதமர் மோடி பங்கேற்ற பேரணியில், பள்ளிக் குழந் தைகள் பங்கேற்க செய்யப்பட்டது தொடர் பான புகார் குறித்து கேட்டதற்கு, ‘இது தொடர்பாக வந்த காட்சிப் பதிவு ஆதாரத்தை கொண்டு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளோம். அறிக்கை கிடைத்ததும் அதன்பின் நடவடிக்கை எடுக்கப் படும்’’ என்றார்.

No comments:

Post a Comment