கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 23, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

23.3.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை
* உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்கு பணிந்தார் ஆளுநர். க.பொன்முடி மீண்டும் அமைச்சரானார்: உயர்கல்வித்துறை ஒதுக்கீடு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* தேர்தல் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.க.விற்கு ரூ.1751 கோடி நன்கொடை கொடுத்த நிறுவனங்களுக்கு ரூ.3.7 லட்சம் கோடி அளவில் மோடி அரசு ஒப்பந்தங்களை அளித்துள்ளதாக மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டு.
* மேனாள் எம்.பி. ராஜ்குமார் சைனி தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு.
* பொன்முடி அமைச்சராக பதவியேற்பு – சட்டம் வென்றது என்கிறது தலையங்க செய்தி.
தி இந்து
* 2004இன் வரலாறு 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிகழும்: “இந்தியா” கூட்டணி மகத்தான வெற்றி பெறும், மக்களவை தேர்தல் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* எதிர்க்கட்சிகளை அணிதிரட்டவும், ஒழுங் கமைக்கவும், ஆட்சி செய்யவும் அனுமதிக்காத அரசு உங்களிடம் இருந்தால், “நாங்கள் ஜனநாயக நாடு” என்று காட்டிக் கொள்வது கடினம். அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரதாப் பானு மேத்தா.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* எஸ்பிஅய் வெளிப்படுத்திய தரவுகளின்படி, 2019 தேர்தல்கள் நடந்துகொண்டிருக்கும்போது, பத்திரங்கள் மூலம் வந்த அனைத்து நிதிகளில் 84%அய் பா.ஜ.க. கட்சி திரட்டியது அம்பலம்.
* எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரம் விவகாரத்தில் தில்லுமுல்லுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், முறைகேடு செய்தவர்கள் தேசத்துரோக குற்றத்திற்காக தூக்கிலிடப்படுவார்கள் என்கிறார் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திக் விஜய் சிங்.
* பிஎம் கேர்ஸ் நிதியின் பின்னணியில் உள்ள ‘ரகசியங்கள்’ இந்தியா கூட்டணியின் வெற்றியின் மூலம் அம்பலமாகும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
தி டெலிகிராப்
* அதிகார அத்துமீறல் செய்ததற்காக பா.ஜ.க. விலை கொடுக்க வேண்டும். எமர்ஜென்சி காலத்தில் மக்கள் காட்டிய கூட்டுப் பலத்தை தேர்தலில் காட்டுவார்கள் என நம்பிக்கை உள்ளது : அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து சரத் பவார்.
-குடந்தை கருணா

No comments:

Post a Comment