இதுதான் குஜராத் மாடலோ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 13, 2024

இதுதான் குஜராத் மாடலோ!

எதற்கெடுத்தாலும் உ.பி. மாடல், குஜராத் மாடல் என்று அளக்கிறார்களே! உண்மையில் அந்த மாடல்கள் தான் என்ன? எடுத்துக்காட்டுக்கு குஜராத் மாடலில் இருந்து ஒரு முக்கிய தகவல்.
அதுவும் அடிப்படையான கல்விக் கண்களைத் திறக்கும் முக்கிய அம்சத்தில் குஜராத் பி.ஜே.பி. அரசு செய்துள்ள சாதனை இருக்கிறதே – அது சொல்லும் தரமன்று.
“குஜராத் மாநிலத்தில் 341 அரசு துவக்கப்பள்ளிகள் ஒரே வகுப்பறை, ஒரே ஆசிரியருடன் இயங்கி வருகின்றன” என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டமன்றத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் குஜராத் அரசுப் பள்ளிகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ள பிஜேபியைச் சார்ந்த கல்வித்துறை அமைச்சர் குபேர் டிண்டர் தெரிவித்து இருப்பதாவது: “2023-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரையில் மாநிலம் முழுவதும் உள்ள 341 அரசு துவக்கப் பள்ளிகள் ஒரு வகுப்பறையோடு இயங்கி வருகின்றன. இதற்குக் காரணம் பள்ளிக் குழந்தைகள் எண்ணிக்கை குறைவு, ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவு, அறைகள் பாழ டைந்து காணப்படுவது மற்றும் பள்ளி விரிவாக்கத்திற்கு நிலம் கிடைக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன.
அதே நேரத்தில் மாநில அரசு கல்வித்துறைக்கு ரூ.43 ஆயிரத்து 651 கோடி ஒதுக்கி உள்ளது. ஒன்றாம் வகுப்பு ஆசிரியருக்கான 140 பணியிடங்களில் 107 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. மேலும் 982 அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களில் தற்போது வரையில் 542 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. 440 இடங்கள் காலியாக உள்ளன” இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர் களுக்கும் ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்டு பள்ளிகள் இயங்குவதாக கடந்த 12ஆம் தேதி சட்டமன்றத்தில் அரசு தெரிவித் திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து காங்., செய்தி தொடர்பாளர் ஹிரேன் பேங்கர் கூறுகையில், “ஒருபுறம் ஆசிரியர்கள் இல்லை என்று அரசு கூறுகிறது. மறுபுறம் ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது கல்வியை தனியார் மயமாக்குவதையும், மாணவர்களைவிட வணி கர்களுக்கு நன்மை செய்வதையும் அரசு விரும்புகிறது” என கூறினார்.
போதுமா குஜராத் மாடலின் அருமை பெருமை. கல்வித்துறை வளர்ச்சி என்பது ஓர் அரசின் அடிப்படைக் கடமையும், பணியுமாகும்.
அதிலேயே இவ்வளவு அலட்சியத்துடன் – இதைவிட கீழிறக்கம் ஒன்றும் இருக்க முடியாத அளவுக்கு நலிந்து, நசிந்து நாற்றமெடுத்துக் குலைந் துள்ளது குஜராத் பிஜேபி அரசின் கல்வித்துறை.

தமிழ்நாட்டோடு ஒப்பிடும் போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடாகும்.
பிஜேபி ஆளும் ஒன்றிய அரசாக இருந்தாலும் சரி, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களாக இருந்தாலும் சரி எல்லா வற்றிலும் படுமோசமான வளர்ச்சிதான்.
பிஜேபி ஆளும் மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக் கானவர்கள் வேலை தேடி தமிழ்நாட்டை நோக்கி நாளும் குஜராத்திலிருந்து வருவதிலிருந்தே தெரிந்து கொள் ளலாமே தமிழ்நாட்டு மாடலின் அருமையையும், பிஜேபி ஆளும் மாநிலங்களின் அவலத்தையும்! வாயால் வடை சுடுவது நீண்ட நாளைக்கு நிலைக்காது. விளம்பர வேடம் எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்கும்? வரும் மக்களவைத் தேர்தலில் அம்பலப்படும் என்பதில் அய்யமில்லை.

 

No comments:

Post a Comment