அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது தி.மு.க. தேர்தல் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 21, 2024

அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது தி.மு.க. தேர்தல் அறிக்கை

featured image

அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது
தி.மு.க. தேர்தல் அறிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை, மார்ச்.21- தகுதி,கள நிலவரங்களை ஆராய்ந்து பார்த்து வேட்பாளர்களைத் தேர்வு செய்தி ருக்கிறோம் என்றும், தி.மு.கவின் தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது என்றும் திமுக தலைவர் முதலமைச்சர் மு.கஸ்டாலின் பேசினார்.

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள திமுக தலைமையகமாகிய அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நேற்று (20.3.2024)திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலில் திமு.க சார்பில் போட்டியிடும் 21 வேட்பா ளர்களை அறிவித்தார், அதை, தொடர்ந்து, அவர் பேசியதாவது,

நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்சிப் பணிகளை ஒருங்கிணைக் கவும்.மேற்பார்வையிடவும் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் என்னால் நியமிக்கப் பட்டார்கள்.

அந்தப் பணியைத் தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்குத் தொகுதி களைப் பங்கிட்டுக் கொடுப்பதற்காக பொருளாளர் டி.ஆர்.பாலு தலை மையில் கே.என்.நேரு. இ.பெரியசாமி, க.பொன்முடி. ஆ.ராசா, திருச்சி சிவா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்தார்கள். இதற்காக நன்றி தெரிவிக்கிறேன். ஒன்றியத்தில் பா.ஜனதா ஆட்சியை அகற்றி, இந்தியா கூட்டணி ஆட் சியை அமைக்க வேண்டும் என்ற உன்னதமான ஒற்றை எண்ணத் தோடும், தோழமை உணர்வோடும் தொகுதிப் பங்கீடுகள் செய்யப்பட்டு தேர்தல் பணியை நாம் தொடங்கி இருக்கிறோம்

தி.மு.கவை பொறுத்தவரைக்கும். 21 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறோம். அதற்கான விருப்ப மனுக்களை வழங்கி இருந் தோம். விருப்ப மனு அளித்தவர்களை அழைத்து கலந்துரையாடினோம்.

தொகுதிகளுக்கு உட்பட்டிருக்கும் மாவட்டச் செயலாளர்களிடமும் கலந்து பேசினோம். வேட்பாளரின் தகுதி, கள நிலவரங்களை ஆராய்ந்து பார்த்து வேட்பாளர்களைத் தேர்வு செய்திருக்கிறோம். தகுதியுடைய பலர் இருந்தாலும், வேட்பாளர் ஒருவர்தான் என்பதால் எல்லாச் சூழலுக்கும் பொருத்தமானவராக, சிறப்புத் தகுதியை உடைய ஆற்றலைப் பெற்றிருப்பவர்களைக் கொண்ட பட்டிய லைத் தயாரித்திருக்கிறோம்.

மக்களின் தேர்தல் அறிக்கை

தமிழ்நாட்டில் இருக்கும் பல்வேறு தரப்பினரைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களை எல்லாம் முழுமையாகக் கேட்டறிந்து அதை எல்லாம் செயல்படுத்தும் திட்டங் களாக மாற்றித் தேர்தல் அறிக்கையாக ஒப்படைத்து இருக்கிறார்கள். எனவே இது தி.மு.க தேர்தல் அறிக்கை மட்டும் அல்ல, தமிழ்நாடு மக்களின் தேர்தல் அறிக்கையாக அமைந்திருக்கிறது.
2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாசிச பா.ஜனதா இந்தியாவை எல்லா வகையிலும் மிக மோசமாகப் பாழ்படுத்தி விட்டது. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றவில்லை. மொத்தத் தில் இந்தியாவில் இருந்த கட்ட மைப்புகள் எல்லாவற்றையும் சிறுகச் சிறுகச் சிதைத்துவிட்டார்கள்.

தன்னுடைய கையில் கிடைத்த அதிகாரத்தை பா.ஜனதா அரசு வீணடித்து விட்டது என்பதுதான் உண்மை. இனியும் மோடி ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல. நாட்டின் மீதுகொண்ட அக்கறை யால் பா.ஜனதா ஆட்சியை அகற்றி யாக வேண்டும் என்பதற்கு இந்தியா கூட்டணியை இந்தியா முழுமைக்கும் அமைத்திருக்கிறோம்.
நடைபெற இருக்கும் நாடா ளுமன்றத் தோதல் மூலமாக ஒன்றியத்தில் அமையவிருக்கும் புதிய ஆட்சியானது, இந்தியாவின் கூட் டாட்சித் தன்மையை மதிக்கும் ஆட்சியாக அமையும். மாநிலங்களை அரவணைத்து செயல்படுகிற ஆட்சி யாக அமையும். சமத்துவம், சமதர்ம எண்ணம் கொண்ட ஆட்சியாக அமையும்.
அனைவரும் சமம் என்று கருதுகிற சகோதரத்துவ ஆட்சியாக அமையும். மொத்தமாக இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காத்து, மக்களாட்சி மாண்பைச் செம்மைப் படுத்தும் ஆட்சியாக அமையும். அவ்வாறு அமையவிருக்கும் புதிய அரசின் மூலமாக எத்தகைய திட்டங் களைத் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்து தருவோம் என்பதை இந்தத் தோதல் அறிக்கையில் விளக்கியிருக்கிறோம்.

திமுக ஆட்சியின் மூலமாகத் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகத் தீட்டிவரும் திட்டங்களை இந்தியா முழுமைக்கும் கொண்டுசேர்க்கும் செயலையும் செய்ய இருக்கிறோம் அதற்கான 64பக்கம் கொண்ட தேர் தல் அறிக்கையை தயாரித்திருக் கிறோம். அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய அறிக்கையாக இந்தத் தேர்தல் அறிக்கையைத் தயாரித் திருக்கிறோம்.
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் உன்னதத் திட்டங்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான சிறப்புத் திட்டங்கள், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட் டத்திற்குமான வளர்ச்சித் திட்டங்கள் என்று கனிமொழி தலைமையிலான குழு மிகச் சிறப்பாக இந்தத் தேர்தல் அறிக்கையை தயாரித்திருக்கிறது.

தி.மு.க மற்றும் நமது கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும். வேட்பாளர்களை எல்லாம் பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். அதைக் காப்பாற்றித் தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது.

-இவ்வாறு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment