சமூக வலைதளங்களில் அவதூறு பிஜேபி பெண் நிர்வாகி கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 7, 2024

சமூக வலைதளங்களில் அவதூறு பிஜேபி பெண் நிர்வாகி கைது

திருச்சி, மார்ச் 7 திமுக அரசு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பாஜக பெண் பிரமுகரை திருச்சிதனிப்படை காவல்துறை சென்னையில் கைது செய்தனர்.
திருச்சி ஒன்றிய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ஏ.கே.அருண், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் வருண்குமாரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது: பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக உள்ள சவுதாமணி, பள்ளிச் சிறுமிகள் மது குடிப்பது போன்ற காட்சிப் பதிவை சமூக வலை தளத்தில் பதிவிட்டு, திராவிடமாடல் ஆட்சியில் மதுப்புழக்கம், போதைப் பொருள் புழக்கம் அதிகஅளவில் இருப்பதாக கூறியுள்ளார்.

குழந்தைகளை அச்சுறுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசு மீது அவதூறு பரப்பும் வகையி லும் பதிவிட்டசவுதாமணி மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப் பிட்டிருந்தார். இதை யடுத்து, சவுதாமணி மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 504, 505, 153, தகவல் தொழில்நுட்பம் சட்டம் பிரிவு 66இ, சிறார் நீதி சட்டம் பிரிவு 74, 77 ஆகிய பிரிவுகளில் திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து, சென்னையில் இருந்த சவுதாமணியை தனிப்படை காவலர்கள் கைது செய்து,திருச்சிக்கு அழைத்து வந்தனர். திருச்சி குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் 5-இல் அவர் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி பாலாஜி, புகார் மீது எவ்வித முகாந்திரமும் இல்லை என்று கூறி, நீதி மன்றக் காவலுக்கு மறுத்து, சவுதா மணியை பிணையில் விடுவித்தார்.

No comments:

Post a Comment