திரிணாமுல் காங்கிரசுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 4, 2024

திரிணாமுல் காங்கிரசுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது

குவாலியர், மார்ச் 4- திரிணா முல் காங்கிரசுடன் கூட் டணிக்கான கதவு இன் னும் திறந்தே உள்ளது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்த லில் மேற்கு வங்காளத்தில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங் கிரஸ், கம்யூனிஸ்டு கட் சி களுக்கிடையே தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை.

மேற்கு வங்காளத்தி லுள்ள 42 தொகுதிகளி லும் தனித்து போட்டியி டப் போவதாக திரிணா முல் காங்கிரஸ் தலைவர் மம்தா அறிவித்துள்ளார்.
இந்நிலையில், காங் கிரஸ் கட்சி பொதுச்செய லாளர் ஜெய்ராம் ரமேஷ், மத்தியப்பிரதேச மாநி லம் குவாலியரில் பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-

திரிணாமுல் காங் கிரஸ் தலைவர் மம்தா, ‘இந்தியா’ கூட்டணியில் இருப்பதாக கூறியுள் ளார். எனவே, பா.ஜனதாவை தோற்கடிப்ப தற்குத்தான் அவர் முன் னுரிமை அளிப்பார் என்று நம்புகிறோம். அவ ரது நோக்கத்தை காட் டும் அறிக்கையாக அதை பார்க்கிறோம். நாங்கள் கதவு எதையும் மூட வில்லை. மேற்கு வங்கா ளத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக மம்தா தன்னிச்சையாக அறிவித்துள்ளார். அது அவரது அறிவிப்பு. காங் கிரசை பொறுத்தவரை, இன்னும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்ட ணிக்கான கதவு இன்னும் திறந்தே உள்ளது. இறுதி வார்த்தை சொல்லப்படும் வரை எதுவுமே இறுதி யானது அல்ல
ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது பற்றி ஆலோசனை நடந்து வருகிறது. எந்தத் தொகு தியில் போட்டியிடுவது என்பதை ராகுல்காந்தி முடிவு செய்வார்.
பா.ஜனதா வேட்பா ளர்கள் பட்டியல் பற்றி நான் கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை.-இவ் வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment