கரூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 20, 2024

கரூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

featured image

கரூர், மார்ச் 20- கரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 17.3.2024 அன்று காலை 10 மணிக்கு புலி யூர் பெரியார் பெருந் தொண்டர் வீரமணியின் இல்லத்தில் கரூர் மாவட்ட கழக தலைவர் ஆசிரியர் ப. குமாரசாமி தலைமை யில் நடைபெற் றது.
மாவட்ட காப்பாளர் வே ராஜு, பொதுக்குழு உறுப்பினர்கள் சே.அன்பு, கட்டளை வைரவன், ஜெகநாதன், மாவட்டச் செயலாளர் காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர் திருச்சி மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்), கா.சிவா (தொழிலாளர் கழக பேரவை தலைவர்) ஆகி யோர் கருத்துரை வழங்கி னர். தொழிலாளர் அணியை விரிவுபடுத்து வது, தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழி லாளர் நல சங்க உறுப் பினர் சேர்க்கை குறித்து விரிவாக பேசினர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழி லாளர் நல சங்கத்தில் ஏராளமான உறுப்பினர் களை சேர்க்க அனைத்து தோழர்களும் தேவை யான நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி அளிப்பதாக தீர்மானிக் கப்படுகிறது.
ராஜாமணி தொழிலா ளர் அணி அமைப்பை பெரியார் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கத்துடன் இணைத்து விரிவான அமைப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் என தீர்மானிக் கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர் தலில் இந்தியா கூட்டணி வெற்றிக்கு அயராது உழைப் பது என்று தீர்மானிக்கப் படுகிறது.

நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி அமைப்பா ளர் ராஜாமணி, செயலா ளர் மாவட்ட பகுத்தறிவா ளர் கழகச் செயலாளர் ம. பொம்மன், மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் அலெக்ஸ், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் பெரியார் செல்வம், கிருஷ்ணராய புரம் ஒன்றிய தலைவர் பெருமாள், கரூர் ஒன்றிய தலைவர் எஸ் பழனிச் சாமி, மாவட்ட தொழி லாளர் அணி செயலாளர் கார்த்தி, மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் காந்திகிராமம் ராஜா, வெங்ககல்பட்டி கணே சன், நே. பூபதி, பெரியார் பெருந்தொண்டர் டீ கூடலூர் பி ராமசாமி, பெரியசாமி கிருஷ்ண ராயபுரம் ஒன்றிய துணைத் தலைவர், கே வீரமணி, உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் காளி முத்து நன்றி கூறினார்.

No comments:

Post a Comment