சரியான கட்டமைப்புடன் தி.மு.க.வின் தேர்தல் பணி எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் தி.மு.க. தொகுதி பொறுப்பாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 21, 2024

சரியான கட்டமைப்புடன் தி.மு.க.வின் தேர்தல் பணி எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் தி.மு.க. தொகுதி பொறுப்பாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்

featured image

சரியான கட்டமைப்புடன் தி.மு.க.வின் தேர்தல் பணி
எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும்
தி.மு.க. தொகுதி பொறுப்பாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை, மார்ச் 21- எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று தி.மு.க.வின் தொகுதி பொறுப்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

நாடாளுமன்ற தேர்தலை யொட்டி தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று (20.3.2024) வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து காணொலிக் காட்சி வழியாக தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது தி.மு.க. சார்பில் அறிவிக் கப்பட்ட வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண் டும் என்று வலியுறுத்தினார். தி.மு.க. தேர்தல் அறிக்கையை மக்கள் மத்தியில் எடுத்து சென்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

நம்முடைய கூட்டணிக் கட்சியி னர் தோளோடு தோளாக நீண்ட காலமாக கொள்கை உணர்வுடன் பயணிக்கிறார்கள். அதனால் நட்புணர்வோடு கலந்து தொகுதிப் பங்கீடு செய்திருக்கிறோம்.சில தொகுதிகளைப் பெற்று சில தொகுதிகளை விட்டுக்கொடுத்திருக்கிறோம்.

பலம் வாய்ந்த பெரிய கூட்டணி யில் இது இயல்பானது. தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியுடைய நலன் முக்கியம், தமிழ்நாட்டின் நலன் முக்கியம். நாட்டினுடைய எதிர்காலம்தான் முக்கியம் வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும்.

வாக்கு குறைந்தால்….

மாவட்ட பொறுப்பு அமைச் சர்களுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் அவரவர் மாவட்டங்க ளைச் சார்ந்த சட்டமன்ற தொகுதி களில் வாக்குகளை கூடுதலாக பெற்று தரும் பொறுப்பு சாரும். ஒருசட்டமன்ற தொகுதியில் வாக் குக் குறைந்தாலும் அதற்கு அந்த மாவட்ட செயலாளரும், பொறுப்பு அமைச்சரும்தான் பொறுப்பு.
தொகுதி மட்டுமில்லாமல் தேர்தலுக்கு பிறகு, ஒன்றிய நகரம், பகுதி, பேரூர் அளவில் வாக்கு வித்தியாசத்தின் பட்டியலை எடுக்கப்போகிறேன். எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும், அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும். இதை ரொம்ப கண்டிப்புடன் சொல்லுகிறேன். எல்லா தொகுதிகளிலும் நான் தான் (மு.க.ஸ்டாலின்) வேட்பாளர் என்ற எண்ணம் எல்லோ ரிடமும் இருக்க வேண்டும்.

வெற்றி உறுதி

தோழமைக் கட்சிகளையும் இணைத்து தேர்தல் பணிக் குழுக் களை அமைக்க வேண்டும். போஸ் டர்கள், துண்டறிக்கைகளில் கூட் டணியிலுள்ள அனைத்துக் கட்சிக ளின் தலைவர்களின் படங்களுக்கும் கட்டாயம் இடம் கொடுக்க வேண் டும். வேட்பாளர் யாராக இருந் தாலும் அரவணைத்து மக்களிடம் அழைத்துச் செல்லுங்கள்.

வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்பதுதான் ரொம்ப முக்கியம். மக்களை நேரடியாக சந்திக்க வேண் டும். “இந்தியா” கூட்டணி ஆட்சி அமைந்தால்தான், தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களைக் கொண்டுவர முடியும். மாபெரும் வெற்றியை நாம் பெற வேண்டும். புதுச்சேரி உள்பட 40 தொகுதி களிலும் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம் என்பது உறுதி. ஜூன் 4ஆம் தேதி வெற்றிச் செய்தியோடு வந்து என்னைச் சந்தியுங்கள்.

-இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment