டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது இந்தியா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 23, 2024

டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது இந்தியா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுடில்லி,மார்ச் 23- ஒன்றிய அரசால் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து பல மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் (21.3.2024) டில்லியில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் தலை நகர் டில்லியில் விடிய விடிய போராட்டம் நடத்தினர். நேற்றும் (22.3.2024) இந்த போராட்டம் தொடர்ந்தது டில்லியில் உள்ள அய்.டிஓ கூட்டுரோட்டிலும், பா.ஜனதா அலுவலகம் அமைந்துள்ள தீனதயாள் உபாத்தியாயா சாலையிலும், ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். முன்ன தாக அந்த பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. இதனை மீறி அதிஷி உள்ளிட்ட டில்லி மாநில அமைச்சர்களும், கட்சியினரும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பா.ஜனதாவுக்கு எதிராக அவர்கள் முழக்கம் எழுப்பினர்.

பஞ்சாப் முதலமைச்சர் கைது

போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், டில்லி அமைச் சர் அதிஷி உள்ளிட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதே போல் சத்தீஷ்காரின் ராய்ப்பூர், குஜராத்தின் மதர் பாத், பஞ்சாப் மாநிலங்களில் போராட் டம் நடந்தது.

No comments:

Post a Comment