இஸ்ரோவில் இணைய விருப்பமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 7, 2024

இஸ்ரோவில் இணைய விருப்பமா?

இஸ்ரோவின் கீழ் செயல்படும் தேசிய ரிமோட் சென்சிங் மய்யத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

காலியிடம்: சயின்டிஸ்ட் இன்ஜினியர் பிரிவில் ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் 7, ஜியோபிசிக்ஸ் 4, மண் அறிவியல் 4, நீர்வளம் 6, மருத்துவ அதிகாரி 1, செவிலியர் 2, நூலக உதவியாளர் 3 உட்பட மொத்தம் 41 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் எம்.இ., / எம்.டெக்., / எம்.எஸ்சி., / டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது: 12.2.2024 அடிப்படையில் 18-28, 18- 30, 18- 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 750. இதிலிருந்து பெண்கள் / எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் முழுவதும், மற்ற பிரிவினருக்கு ரூ. 500 திருப்பி அளிக்கப்படும்.
கடைசி நாள்: 12.2.2024 மாலை 5:00 மணி.
விவரங்களுக்கு: nrsc.gov.in

No comments:

Post a Comment