திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்த கொம்பனாலும் முடியாது : மு.க. ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 29, 2024

திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்த கொம்பனாலும் முடியாது : மு.க. ஸ்டாலின்

featured image

தி.மு.க. செயல் தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பதிவில் கூறியதாவது:
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சி சம்பந்தமான சர்ச்சையினையடுத்து, நடிகரும் நண்பருமான எஸ்.வி.சேகர் என்னிடம் அலைபேசியில் பேசினார். சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த நிலையில், நீங்கள் சொல்வதை கவனிக்கிறேன் எனத் தெரிவித்து, அதுபற்றி கவனம் செலுத்துமாறு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பியிடம் தெரிவித்தேன். டி.வி. விவாதம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் திமுக சார்பில் பங்கேற்கவிருந்த உறுப்பினரும் எனது கருத்தை அறிந்தபின் பங்கேற் கலாம் என்பதால் அந்த நிகழ்வை கடமை உணர்வோடு தவிர்த்திருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக, தனிமனித நட்புக்கு அரசியல் வண்ணம் பூசப்பட்டு, சமூக ஊடகங்களில் விமர்சனங்களாகி வருவதை பின்னர் அறிந்தேன். நூற் றாண்டு கால திராவிட இயக்கம் எந்த சமூக நீதிக் கொள்கையையும் சமநீதி யையும் சமத்துவத்தையும் முன்வைத் துப் பாடுபடுகிறேதா அந்தக் கொள் கைகளுக்கு குன்றிமணி அளவிலும் குந்தகம் ஏற்படாத வகையிலும் பகுத்தறி வுடனும் சுயமரியாதையுடனும் திமுக தொடர்ந்து செயல்படும் என்பதில் எவருக்கும் எள்ளளவும் சந்தேகம் ஏற்பட வேண்டியதில்லை.

தந்தை பெரியாருக்கு ராஜாஜியுட னும் நட்பு உண்டு, குன்றக்குடி அடிகளா ருடனும் நட்பு உண்டு. அதற்காகத் தனது கொள்கைகளை எப்போதும் அவர் விட்டுத் தந்ததில்லை. அது போலவே அண்ணாவும், தலைவர் கருணாநிதியும் தனிப்பட்ட முறையில் பலருடனும் நட்பு பாராட்டினாலும் கொள்கைகளில் கொண்டிருந்த உறு தியை எதற்காகவும் தளர்த்தியதில்லை. அவர்களின் வழியில் இந்தப் பேரியக் கத்தின் செயல்தலைவர் என்ற பொறுப் பில் உள்ள நான், எந்த சூழலிலும் திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சான கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பேன். அதற்காக எதையும் யாரையும் எதிர் கொள்வேன். யாரிடமும் எனக்கு தனி மனித விரோதமில்லை, பேதமுமில்லை. அதேநேரத்தில், தனிப்பட்ட நட்புக்காக, திராவிட இயக்கக் கொள்கைகளை விட்டுக் கொடுப்பது, சமரசம் செய்து கொள்வது என்ற பேச்சுக்கே இட மில்லை. திராவிட இயக்கத்தை அசைத் துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் எந் தத் தருணத்திலும் முடியவே முடியாது என்பதே எனது உறுதியான நிலைப் பாடு. இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment