கடலோர காவல் படையில் காலி இடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 28, 2024

கடலோர காவல் படையில் காலி இடங்கள்

இந்திய கடலோர காவல்படையில் காலிப் பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பதவியில் ஜெனரல் டியூட்டி 50, டெக்னிக்கல் (மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ்) பிரிவில் 20 என மொத்தம் 70 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஜெனரல் டியூட்டி பணிக்கு டிகிரி, டெக்னிக்கல் பணிக்கு தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2024 அடிப்படையில் 21 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: இணையவழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை: இணையவழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 6.3.2024

No comments:

Post a Comment