உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்தின் கலங்கரை விளக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 21, 2024

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்தின் கலங்கரை விளக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை,பிப்.21- சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:
சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பானது நீதிக்கும் இம்மண்ணின் சட்டத்துக்குமான ஒளிவிளக் காக அமைந்துள்ளது. அரசியல் சட்டப் பிரிவு 142-இன்கீழ் தனக்குள்ள அரிதினும் அரிதான அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ள உச்சநீதி மன்றம், நியாயத்தை நிலைநாட்டியுள்ளதுடன் தேர்தல் அதிகாரியின் தில்லுமுல்லு செயலை யும் உறுதியாக நிராகரித்துள்ளது. 2024 நாடா ளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேர்மைக்கும் மக்களாட்சித் தத்து வங்களுக்குமான இந்த வெற்றி இந்திய ஜன நாயகத்தின் வலுவான செய்தியை எடுத்து ரைப்பதோடு, பா.ஜ.க.வின் தகிடுதத்தங்களுக் குத் தக்க எச்சரிக்கையையும் விடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment