அய்.டி.அய்., படிப்புக்கு சுரங்க நிறுவனத்தில் வேலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 28, 2024

அய்.டி.அய்., படிப்புக்கு சுரங்க நிறுவனத்தில் வேலை

featured image

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் இந்தியன் ரேர் எர்த்ஸ் (அய்.ஆர்.இ.எல்.,), சுரங்க நிறுவனத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டிரேட்ஸ்மேன் பிரிவில் பிட்டர் 46, எலக்ட்ரீசியன் 16, கெமிக்கல் பிளான்ட் ஆப்பரேட்டர் 4 உட்பட மொத்தம் 67 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் அய்.டி.அய்., முடித்திருக்க வேண்டும்.
வயது: 15.3.2024 அடிப்படையில் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
பணியிடம்: தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா, மத்தியப்பிரதேசம்
தேர்ச்சி முறை: இணையவழி தேர்வு, திறன் தேர்வு.
தேர்வு மய்யம்: சென்னை, நாகர்கோவில்.
விண்ணப்பிக்கும் முறை: இணையவழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 15.3.2024

No comments:

Post a Comment