செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 7, 2024

செய்திச் சுருக்கம்

இடஒதுக்கிடு
சென்னை அய்.அய்.டி. வரலாற்றில் முதல் முறையாக விளையாட்டுப் பிரிவு மாணவர் களுக்காக இளநிலை படிப்புகளில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

மீனவர்கள் திரும்பினர்
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப் பட்டு விடுவிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர் கள் 12 பேர் சென்னை வந்தனர். அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பழங்குடி மகளிருக்கு…
தமிழ்நாடு அரசு சார்பில் காணி பழங்குடி மகளிர் குழுவிற்கு ரூ.25 லட்சம் புத்தொழில் நிதியுதவி வழங்கப்பட்டதையடுத்து மதிப்புக் கூட்டப்பட்ட மலையகத் தேன் விற்பனை மூலம் கன்னியாகுமரி மாவட்ட பழங்குடி மக்களை முன்னேற்றும் மகத்தான சாதனை படைத்துள்ளனர்.

அகற்றம்
சிறுமியின் உடலில் இருந்த 15 செ.மீ. நீள கல்லீரல் புற்றுக் கட்டியை அகற்றி காவிரி மருத்துவமனை சாதனை செய்துள்ளது.

பொருந்தாது
திறந்த நிலைப்பள்ளி நிறுவனங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்களின் கல்வித் தகுதியை , தமிழ்நாடு அரசின் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் படித்து தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிக்கு இணையாக கருத முடியாது. அதன் அடிப் படையில் வேலைவாய்ப்பு, பதவி உயர்வுக்கு அனுமதிக்க முடியாது என பள்ளி கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன் அறிவிப்பு.

கணினித் தமிழ்
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தமிழின் நிலை குறித்து ஆராய்தல், விவாதித்தல், புதிய சிந்தனைகளை உருவாக்குதல், இளம் திறமைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட இலக்குகளை அடைவதற்காக பன்னாட்டு கணினித்தமிழ் மாநாட்டை தமிழ்நாடு அரசு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் நாளை (8.2.2024) முதல் மூன்று நாள்கள் நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment