மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் மீண்டும் தீவிரம் அரசுப் பேருந்து தீ வைத்து எரிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 27, 2024

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் மீண்டும் தீவிரம் அரசுப் பேருந்து தீ வைத்து எரிப்பு!

featured image

ஊரடங்கு உத்தரவு; இணைய சேவை துண்டிப்பு

மும்பை, பிப்.27- மராட்டியத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 20.2.2024 சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி மாநில அரசு மராத்தாக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோ தாவை நிறைவேற்றியது. ஆனால் தங் களுக்கு தனியாக இடஒதுக்கீடு வேண்டாம், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் (ஓ.பி.சி.) கீழ் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இதற் கிடையே நேற்று ஜல்னா, பீட், சத்ரபதி சம்பாஜிநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் தீவிரம் அடைந்தது. நேற்று காலை ஜல்னாவில் உள்ள அம்பாத் தாலுகா பகுதியில் மராத்தா போராட்டக்காரர்கள் அரசுப் பேருந்தை தீவைத்து எரித்தனர். மேலும் பல இடங் களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வை அடுத்து அங்கு அரசு பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வன்முறை நடந்த அம்பாத் தாலுகாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணைய தள சேவையும் துண்டிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment