மண்டலுக்கு எதிராகத் தூக்கப்பட்டதுதான் கமண்டல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 6, 2024

மண்டலுக்கு எதிராகத் தூக்கப்பட்டதுதான் கமண்டல்!

featured image

மண்டலுக்கு எதிராகத் தூக்கப்பட்டதுதான் கமண்டல்!
கமண்டல் போராட்டத்தில் எல்லாவிதமான வித்தைகளையும், சூழ்ச்சிகளையும் கையாண்டதால் – இன்றைக்கு அயோத்தியில் இராமன் கோவில்!
‘‘இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் உரிமையும் – கடமையும்!” திராவிட மாணவர் கழகத்தினர் நடத்திய சிறப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

சென்னை, பிப்.6 மண்டலுக்கு எதிராகத் தூக்கப்பட்டது தான் கமண்டல். கமண்டல் போராட்டத்தில் எல்லா விதமான வித்தைகளையும் கையாண்டு, எல்லாவிதமான சூழ்ச்சிகளையும் கையாண்டதால், இன்றைக்கு அயோத்தியில் இராமன் கோவில் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் உரிமையும் – கடமையும்!’’ -திராவிட மாணவர் கழகத்தின் சிறப்புக் கருத்தரங்கம்

கடந்த 1-2-2024 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் உரிமையும்- கடமையும்‘’ -திராவிட மாணவர் கழகத்தினர் நடத்திய சிறப்புக் கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு

ஏகலைவனிடம் துரோணாச்சாரியார் கட்டை விரலை வாங்கினார் என்கிற வரலாறு எல்லாம் உங் களுக்கு நன்றாகத் தெரியும்.

சமூகநீதியை ஒழிப்பதிலேயே குறியாக இருக்கிறது ஆர்.எஸ்.எஸ். ஆட்சி, மோடி பா.ஜ.க. ஆட்சி!

மிக முக்கியமான செய்தி என்னவென்றால், மண்டல் கமிசன். அந்த அறிக்கையை நடை முறைப்படுத்தும்பொழுது பிரச்சினைகள் பெரிதும் ஏற்பட்டன. அதை சமாளித்து நாம் போராடி, வெற்றி பெற்றோம். அதை ஒழிப்பதற்காகத்தான், ஒன்றியத்தில உள்ள ஆர்.எஸ்.எஸ். ஆட்சி, மோடி பா.ஜ.க. ஆட்சி இன்றைக்குத் துடித்துக்கொண் டிருக்கின்றது.

இராமனைக் காட்டி, பக்தியைக் காட்டி ஆட்சிக்கு வரவேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்!

மீண்டும், மக்களை எப்படியாவது ஏமாற்றி, இராம னைக் காட்டி, பக்தியைக் காட்டி ஆட்சிக்கு வரவேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்.
மண்டல் கமிசன் அறிக்கையில் உள்ளவற்றை மாண வர் கழகக் கூட்டங்களில் எடுத்துச் சொல்லவேண்டும்.
இதுவரையில் நாம் சில பொதுக் கருத்துகளைப் பேசுகிறோம். அதிலிருந்து வடிவமைக்கப்பட்ட அடுத்த நிலையடைந்த மாணவர்கள் சமூகநீதியைப்பற்றி நன் றாகத் தெரிந்துகொள்ளவேண்டும். அதைப்பற்றி மக் களுக்கு விளக்கக் கூடிய அளவிற்கு ஆற்றல் வாய்ந்த வர்களாக இருக்கவேண்டும்.
வெறும் புராணத்தில்தானே அது இருக்கிறது; இப்பொழுது அதைப்பற்றியெல்லாம் பேசவேண்டுமா? என்று சில பேர் சொல்கிறார்கள்.

சம்புகன் கதை கற்பனை என்றால், இராமன் எப்படி உண்மையாக இருக்க முடியும்?

சம்புகன் கதையைச் சொன்னாலே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்ன சொல்கிறார் தெரியுமா?
‘‘அதெல்லாம் கற்பனை” என்கிறார். சம்புகன் கதை கற்பனை என்றால், இராமன் எப்படி உண்மையாக இருக்க முடியும்?
இராமனே கற்பனைதான். நம்மை ஏமாற்று வதற்காக எத்தனையோ கடவுள்களை உண்டாக்கி, அதில் ஒன்று, இராமன் அவதாரம் என்று தெளி வாகச் சொல்லியிருக்கின்றோம்.
மண்டல் கமிசன் அறிக்கையில், நான்காவது அத்தி யாயத்தில் சமூகத்தில் எப்படி நாம் பிற்படுத்தப்பட்டோம்? ஜாதியை எப்படி அவர்கள் பயன்படுத்தினார்கள்?
ஏன் இட ஒதுக்கீடு தேவை? என்பதை விளக்கி மண்டல் அவர்கள் சிறப்பாக எழுதியிருக்கிறார்.
அதில் பல செய்திகள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட செய்தியை மட்டும் சொல்கிறேன்.

தமிழ்நாட்டில் ஒரு கூலியைப் பிடித்தார்கள்; அதுதான் கம்பன்!

வால்மீகி இராமாயணத்தைப்பற்றி சொல்லும்பொழுது, வால்மீகி எழுதியது சமஸ்கிருதத்தில். ஆயிரம் ஆண்டு களுக்குப் பிறகு ஹிந்தியில் மொழி பெயர்க்கிறார்கள். அதற்குப் பெயர் ‘‘துளசிதாஸ் இராமாயணம்‘’ என்பது. அவருடைய இயற்பெயர் கோசாமி என்பதுதான். அதே காலகட்டத்தில், தமிழ்நாட்டில் ஒரு கூலியைப் பிடித் தார்கள்; அவர்தான் கம்பன்.
கம்பனைப் பிடித்து, இராமாயணத்தை எழுதச் சொன்னார்கள்.
ஹிந்தியில் எழுதிய இராமாயணத்தில், வால்மீகி இராமாயணத்தில் இருக்கக்கூடியதைக் கொஞ்சம் மெருகேற்றி, ‘‘புருஷோத்தம மரியாதை இராமன்” என்று கடவுள் அவதாரமாக்கினார்கள்.

வால்மீகி இராமாயணத்தில் இராமன் கடவுள் அல்ல; மனிதன்தான்!

வால்மீகி இராமாயணத்தில் இராமன் கடவுள் அல்ல; மனிதன்தான். இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் எழுதிய இராமாயணத்திலேயே இதைச் சொல்லியிருக் கிறார், சக்ரவர்த்தி திருமகனில்.
மண்டல் கமிசன் அறிக்கை நான்காவது அத்தி யாயத்தில்,
‘‘Venerate a Brahmin even if he is deviod of all virtue, but not a Shudra even if he is packed with virtue and knowledge.”

இதன் தமிழாக்கம் வருமாறு:

‘‘ஒழுக்கம் கெட்ட பார்ப்பானென்றாலும் நீங்கள் வணங்கவேண்டுமே தவிர, ஒழுக்கமும், நேர்மையும், திறனும் எல்லாம் உள்ளவனாக இருந்தாலும், ஒரு சூத்திரனை வணங்கக் கூடாது.”
இதுதான் இராமன் இட்ட கட்டளை. இதை எதில் விளக்கி எழுதியிருக்கிறார்கள் என்றால், மண்டல் கமிசன் அறிக்கையில். மண்டலுக்கு எதிராகத் தூக்கப் பட்டதுதான் கமண்டல்.
எல்லாவிதமான சூழ்ச்சிகளையும் கையாண்டதால், இன்றைக்கு அயோத்தியில் இராமன் கோவில்!
கமண்டல் போராட்டத்தில் எல்லாவிதமான வித்தைகளையும் கையாண்டு, எல்லாவிதமான சூழ்ச்சிகளையும் கையாண்டதால், இன்றைக்கு அயோத்தியில் இராமன் கோவில். உச்சநீதிமன்றம் உள்பட எல்லோருக்கும் அதில் பங்களிப்பு உண்டு.
உச்சநீதிமன்ற வரலாற்றில், தீர்ப்பு எழுதிய நீதிபதி யார் என்று கண்டுபிடிக்க முடியாத – கையெழுத்துப் போடாத தீர்ப்பு.
இது மிகவும் விசித்திரமானது.

வெளிநாடுகளுக்குச் செல்லுகின்றபொழுது, மண்டல் கமிசன் அறிக்கையின் நகலை எடுத்துக்கொண்டு செல்வேன்.
‘‘எங்கள் நாட்டு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு, ஓர் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட, அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்ட ஓர் ஆணையத்தினால் கொடுக்கப்பட்ட அறிக்கை – அந்த அறிக்கையில் இருக்கின்ற உண்மைகள்” என்று விளக்குவதற்கு அது பயன்படுகின்றது.
திராவிடர் கழகம் எங்கே இருக்கிறது? என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்கிறேன்.

எங்கே இருக்கிறதா?
மண்டல் கமிசனின் உள்ளே இருக்கிறது.
மண்டல் கமிசன் அறிக்கையில்,

‘‘Mahabharata narrates the story of Eklabya, a tribal boy, who went to Guru Dronacharaya for learning Dhanur Vidya (archery). The Guru refused to take him as a pupil, as this vidya could be imparted to Kshatriyas only. One day Dronacharaya went to a forest with his students, Kauravas and Pandavas, to practise archery. A dog accompanying the party was hit by an arrow in the mouth, when he happened to bark. Obviously, the archer, hidden from the view, had hit the dog by just aiming in the direction of his bark. Dronacharaya knew that only Arjuna capable of such a feat. He called for the marksman and Eklabya emerged from the forest and confessed having killed the dog by his arrow. On being asked about the identity of his Guru, he replied that he was Dronacharya’s pupil. In explanation he recalled the earlier episode and stated that he had learnt Dhanur Vidya from the statue of Dronacharya which he had erected in the forest, Dronacharya asked for right hand thumb of Eklabya as Guru Dakshina. Eklabya readily complied with the wishes of his Guru, though he could never again handle a bow with his disabled hand.”

கல்வி மறுக்கப்பட்ட வரலாறு!

‘‘நீ என்னை மாதிரியே உருவம் செய்து வைத்து, வில்வித்தையைக் கற்றுக்கொண்டேன் என்கிறாயே, அப்படியென்றால், குருதட்சணை வழங்கவேண்டும் அல்லவா! உன்னுடைய வலது கை கட்டை விரலை குருதட்சணையாகக் கொடு’’என்று துரோணாச்சாரியார் கேட்கிறார்.
உடனே ஏகலைவன், ‘‘நீங்கள் என்ன கேட்டாலும் குருதட்சணையாகக் கொடுக்கிறேன்” என்றான்.
‘‘அப்படியா? நான் என்ன கேட்டாலும் கொடுப் பாயா?” என்று துரோணாச்சாரியார் கேட்கிறார்.
‘‘கொடுப்பேன்” என்று சொல்கிறான் ஏகலைவன்.
‘‘உனது வலதுகை கட்டை விரலை கொடு” என்று துரோணாச்சாரியார் கேட்கிறார்.
ஏன் வலது கை கட்டை விரலைக் கேட்டார் என்றால், அதற்குள் இன்னொரு சூழ்ச்சி இருக்கிறது.
வில்லில் நாண் ஏற்றுவது என்றால், வலது கை கட்டை விரலின் பங்கு அதிகம் இருக்கும். அதனால்தான் வலது கை கட்டை விரலை கேட்டான் துரோணாச்சாரி.
அதற்குப் பிறகு ஏகலைவன் இல்லை – வில்லைத் தொடவில்லை!
இதுதான் கல்வி மறுக்கப்பட்ட வரலாறு.
இன்றைக்கு பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி என்று நீங்கள் எல்லாம் சொல்கிறீர்கள். அன்றைக்கு தனுஷ்வித்யா என்று சொல்லக்கூடிய வில் வித்தை. இன்றைக்கும் அதை நடத்துகிறார்கள்.
திராவிட இயக்கத்தினால்,
பெரியார் பிறந்ததினால்தான்…
இன்றைக்கு ஏன் மற்றவர்கள் கற்றுக்கொள்ளவேண்டி நிலை வந்திருக்கிறது. அன்றைக்கு துரோணாச்சாரியார், ஏகலைவனின் கட்டை விரலை குருதட்சணையாக வாங்கினார். இன்றைக்கு வில்வித்தையை எல்லோரும் கற்றுக்கொள்கிறார்கள்.
இது தானாக நடந்ததா? இல்லை தோழர்களே, திராவிட இயக்கத்தினால், பெரியார் பிறந்ததினால்தான்.
இன்றைக்குக் கட்டை விரலை யாராவது குரு தட்சணையாகக் கேட்பாரா? அப்படி கேட்டால், அவரு டைய கட்டை விரல் இருக்காது.

சமூகநீதிக்காகப் பாடுபட்ட திராவிடர் இயக்கம்!

அப்படிப்பட்ட ஓர் உணர்வை உருவாக் கினார்கள். அந்த அநீதியைப் போக்கிய இயக்கம், சமூகநீதிக்காகப் பாடுபட்ட திராவிடர் இயக்கம்.
அன்றைக்குத் தொடங்கி, இன்றுவரையில், ஒவ்வொரு கட்டமாகத் தொடர்ந்து கொண்டிருக் கின்றது.
குலத்தொழிலைத்தான் செய்யவேண்டும் என்று 70 ஆண்டுகளுக்கு முன்பு இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் கொண்டு வந்த திட்டத்தைப்பற்றி இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது. ஏன்? 70 வயதானவர் களுக்கே பல பேருக்கு அந்தத் திட்டத்தைப்பற்றி தெரியவில்லை.
ஆனால், நம்முடைய இயக்கம் பிரச்சாரம் செய்த தினால், குலக்கல்வித் திட்டம் என்றால் என்னவென்று தெரியும்.
மாணவர்கள், அரைநேரம் படிக்கவேண்டும்; மீதி அரை நேரம் அப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும்.

நவீன குலக்கல்வித் திட்டம்தான் – ‘‘விஸ்வகர்மா யோஜனா’’ திட்டம்!

இன்றைக்கு அதுதானே ‘‘விஸ்வகர்மா யோஜனா” திட்டம். இன்றைக்கு வெளிப்படையாகச் சொன்னதோடு மட்டுமல்லாமல், அது விஷம் என்று தெரியாத அளவிற்கு அதில் தேனும் தடவியிருக்கிறார்கள்.
18 வயதான இளைஞர்கள் கல்லூரிக்கோ, பல்கலைக் கழகத்திற்கோ சென்று படிக்கவேண்டும். ஆனால், அப்படி ‘‘நீங்கள் படிக்கப் போகவேண்டாம்; உங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயை கடனாகக் குறைந்த வட்டிக்குக் கொடுக்கிறோம்.

எதற்காகக் கொடுக்கிறோம் என்றால், உன் அப்பா வோடு உட்கார்ந்து செருப்புத் தைக்கவேண்டும்; உன் அப்பாவோடு உட்கார்ந்து சவரம் செய்யவேண்டும்; உன் அப்பாவோடு அமர்ந்து சட்டிப் பானை செய்யவேண்டும்; உன் அப்பாவோடு சேர்ந்து துப்பரவுப் பணிகளைச் செய்யவேண்டும்” என்று படம் போட்டுக் காட்டுகிறது ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பார்ப்பன ஆட்சி. இந்த ஆட்சியே மீண்டும் வர வேண்டும் என்று சொல்கிறார்கள் அவர்கள்.
நீட் தேர்வைப்பற்றி சொன்னார்களே, நீட் தேர்வைக் கொண்டு வரும்பொழுது என்ன சொன்னார்கள், தகுதி – திறமை என்று.
நாம் போராடிப் பெற்ற 27 சதவிகிதமான மத்திய ஒதுக்கீட்டில் – சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் முதலில் வேலை வாய்ப்பில் கொடுத்தார்.

காங்கிரஸ் தலைமையில் யு.பி.ஏ. கூட்டணி ஒன்றிய ஆட்சியில் தி.மு.க. பங்கேற்றபோது…
பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்று சொன்னார்கள், அதற்காக நாம் போராடி, கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில், காங்கிரஸ் தலைமையில் யு.பி.ஏ. கூட்டணி ஒன்றிய ஆட்சியில் தி.மு.க. பங்கேற்று – அகில இந்திய அளவில் பிரச்சாரம் செய்து – அந்த இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தோம்.

(தொடரும்)

No comments:

Post a Comment