
கொச்சி, ஜன.31- தொழிலதிபர்கள் பயத்தால் மோடியின் புகழ் பாடுபவர்க ளாக மாறுகிறார்கள். அவர்கள் பாராட்டுக்காகவே தவிர நாட்டில் முதலீடு செய்வதில்லை. நாட்டின் தற்போதைய நிலை மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லா ததே இதற்கு காரணம் என பரகால பிரபாகர் கூறினார். முற்போக்கு கலா சாகித்ய சங்கத்தின் எர்ணா குளம் மண்டலக் குழு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பொருளா தார வல்லுநரும் ஒன்றிய நிதி அமைச் சர் நிர்மலா சீதாராமனின் கணவரு மான பரகால பிரபாகர் பேசினார்.
எஸ்.ரமேசன் நினைவு சொற் பொழிவுத் தொடரில் அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான நிலையில் உள்ளது. 1947 முதல் 2014 வரை இந்தியாவின் மொத்தக் கடன் ரூ.50 லட்சம் கோடி. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 150 லட்சம் கோடி. இளைஞர்களின் வேலை யின்மை விகிதம் 24 சதவிகிதமாக உள்ளது. புதிய தலைமுறை குடியுரி மையை துறந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகிறது. 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி 2,25,000 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர்.
வரி வருவாயில் 42 சதவிகிதத்தை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்ற 14 ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையை மோடி தலையிட்டு குறைத்ததாக நிட்டி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அண் மையில் தெரிவித்தார். அல்ஜசீரா என்ற வெளிநாட்டு ஊடகம் தான் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசுக்குச் சாதகமில்லாத மாநிலங்களுக்கு உரிய பங்கை வழங்காமல் இழுத்தடிக்கிறது.
உண்மை பேசுபவர்கள் துரோ கிகள் ஆக்கப்படுகிறார்கள். நாடா ளுமன்றத்தில் விவாதம் இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதும்; திரும்பப் பெறுவ தும் நடக்கின்றன. கேள்வி எழுப்பியதற்காக நாடாளு மன்ற உறுப்பினர்கள் நீக்கப்படு கிறார்கள். ஆனாலும் இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்று கூறப்படுகின்றது. இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முழக்கம் ‘வசுதேவ குடும்பகம்’. ஆனால் இந்தியாவில் சிறுபான்மையினர் வெளியில் உள்ளனர்.
கவனமாக இல்லாவிட்டால் மணிப்பூரில் என்ன நடக்கிறதோ அது கேரளத்திலும் நடக்கும். 24 மணி நேரமும் வகுப்புவாதிகளுக்காக பிரச்சாரம் செய்ய சேனைகள் உள்ளன. மதச்சார்பின்மைக்கு இப்படி யாராவது இருக்கிறார் களா என்று யோசிக்க வேண்டும். இல்லை என்றால் அது நம் தூக்கத்தைக் கெடுக்க வேண்டும்” என்று பேசினார். எஸ்.ரமேச னின் மனைவி டி.பி.லேலாவுக்கு பிரபாகர் தனது புதிய புத்தகத்தை (சுற்றி வளைக்கப்படும் இந்தியா) கையெ ழுத்திட்டு வழங்கினார். ஷாஜி ஜார்ஜ் பிரணதா தலைமை வகித் தார்.கொச்சி மேயர் எம்.அனில் குமார், நிஷாத்பாபு பேசினர்.
No comments:
Post a Comment