கடவுளின் தலை, கண்கள் இல்லாமல் பிரதிஷ்டை நடத்துவது சரியல்ல! ராமர் கோயில் திறப்புக்கு சங்கராச்சாரியார்கள் மீண்டும் எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 17, 2024

கடவுளின் தலை, கண்கள் இல்லாமல் பிரதிஷ்டை நடத்துவது சரியல்ல! ராமர் கோயில் திறப்புக்கு சங்கராச்சாரியார்கள் மீண்டும் எதிர்ப்பு

featured image

புதுடில்லி, ஜன. 16 – அயோத்தி ராமர் கோயில் கட்டு மானப்பணிகள் பாதி கூட முடி வடையாத நிலையில், அவசர அவ சரமாக ஜனவரி 22 அன்று திறப்பு விழா நடத்தப்பட உள்ளது. இது இந்து மத சாஸ்திர விதிகளுக்கு எதிரானது என்று பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கள் எழுந்துவரும் நிலையில், யார் எதிர்த்தாலும் பிரதமர் நரேந்திர மோடி, குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வது உறுதி என்று ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில், இந்து உணர்வை மூலதனமாக வைத்து தேர்தலில் வெற்றிபெற்று விட வேண்டும் என்பதற் காகவே ராமர் கோயில் அவசர அவசரமாக திறக்கப் படுகிறது என்பது நம்பிக்கையுள்ள இந்து மதத்தவர்களும்கூட ஒப்புக் கொள்ளும் ரகசிய மாகிவிட்டது. இந்நிலையில், ராமர் கோயில் திறப்புக்கு சங்கராச்சாரியார்கள் தொடர்ந்து தங்களின் எதிர்ப்பைத் தெரி வித்து வருகின்றனர். ஒடிசா மாநிலம் பூரியின் கோவர்த்தன் மடம் துவங்கி குஜராத் மாநிலம் துவாரகா மடம், உத்தராகண்ட் மாநிலம் ஜோதிர் மடம், கருநாடகத்தின் சிருங்கேரி சாரதா மடம் ஆகிய 4 மடங்களின் சங்கராச்சாரியார்களும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கப் போவ தில்லை என்று அறிவித்துள்ளனர். இதில், உத்தரா கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜோதிர் மடத்தின் பிரதிநிதி அவி முக்தேஷ்வரானந்த் சரஸ்வதி கடுமையான கண்டனத்தையும் பதிவு செய் திருந்தார். தற்போது மீண்டும் தனது எதிர்ப்பை விளக்கிப் பேட்டி அளித்துள்ளார். அதில் மேலும் அவர் கூறியிருப்பதாவது:

“ஜனவரி 22 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் நான்கு சங்கராச்சாரியார் களில் யாரும் கலந்து கொள்ளப் போவ தில்லை. எங்களுக்கு யார் மீதும் எந்தத் தீய எண்ணமும் இல்லை. ஆனால் இந்து மதத்தின் நெறிமுறை களைப் பின்பற்றுவதும், மற்ற வர்கள் அவ்வாறு செய்யுமாறு அறி வுறுத்துவதும் சங்கராச்சாரியார்களின் பொறுப்பு. அவர்கள் (கோயில் கட்டுமானம் மற்றும் விழா அமைப்பில் ஈடுபட்டுள்ளவர்கள்) இந்து மதத்தில் நிறுவப்பட்ட விதிமுறைகளை புறக் கணிக் கிறார்கள். விதிகளை மீறிவிட்டனர். கோவிலை கட்டி முடிக்காமல் ராம பிரான் பிரதிஷ்டை விழாவை நடத்து வது இந்து மதத்தின் முதல் மீறல் ஆகும். டிசம்பர் 22, 1949 நள்ளிரவில் (பாபர் மசூதியில்) ராமர் சிலை வைக்கப்பட்டபோது அவசர நிலை ஏற்பட்டது, மேலும் 1992-இல் கட்டிடம் (பாபர் மசூதி) இடிக்கப்பட்டது. சில கார ணங்களால் இந்த சம்பவங்கள் தன்னிச்சையாக நடந்தன. சூழ்நிலைகள் மற்றும் அதனால் சங்கராச்சாரிகள் யாரும் அந்த நேரத்தில் எந்த கேள்வி யும் எழுப்பவில்லை. ஆனால் இன்று அப்படியொரு அவசரநிலை இல்லை. ராமர் கோயில் கட்டும் பணியை முடித்துவிட்டு பிரான் பிரதிஷ்டை செய்ய போதுமான நேரம் உள்ளது. ஆனால் அதை மீறி அவசர அவசர மாக இப்படி செய்வது பெரிய விதி மீறல். இப்போது நாங்கள் அமைதி யாக இருக்க முடியாது, முழுமை யடையாத கோவிலை திறந்து வைத்து அங்கு கடவுள் சிலையை நிறுவுவது மோசமான யோசனை. ஒருவேளை அவர்கள் (நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ப வர்கள்) எங்களை மோடிக்கு எதிரானவர்கள் என்று அழைப்பார்கள். நாங்கள் மோடிக்கு எதிரானவர்கள் அல்ல, அதே நேரத்தில் எங்கள் தர்ம சாஸ்திரத்திற்கு எதிராகவும் செல்ல முடியாது.

“கோவிலை இன்னும் கட்டி முடிக்க வில்லை. கட்டுமானப் பணிகள் முழுமை பெறவில்லை. முழுமையடையாத கோயிலில் தெய்வத்தை நிறுவுவது மத சாஸ்திரங்களுக்கு எதிரானது. என்னுடைய ஜோதிஷ் பீடம், ராமர் கோயில் அறக்கட்டளையிடம் இந்த பிரச்சினையை எழுப்பியுள்ளது. முழு கட்டுமானம் முடிந்த பின்னரே கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. கோயில் என்பது கடவுளின் உடல் போன்றது. கோயிலின் மேற்பகுதி கடவுளின் கண்களை குறிக்கிறது. ‘கல சம்’ என்பது கடவுளின் தலையைக் குறிக்கிறது. கோயிலின் கொடி, கட வுளின் முடியை குறிக்கிறது. கடவுளின் தலை இல்லாமலோ கண்கள் இல்லாமலோ உடலுக்கு பிரதிஷ்டை நடத்துவது மத சாஸ்திரங்களுக்கு எதிரானது. எனவே, நான் அங்கு செல்லமாட் டேன். ஏனென்றால், நான் அங்கு சென்றால் மக்கள் என் முன்னால் வேதம் மீறப்பட்டதாகக் கூறுவார்கள். எனவே, பொறுப் புள்ள நபர்களிடம், குறிப்பாக அயோத்தி அறக் கட்டளை உறுப்பினர்களிடம் கோவில் முழுவது மாக கட்டப்பட்டவுடன் கொண்டாட்டத்தை நடத்த வேண்டும் என்று நாங்கள் பிரச்சினையை எழுப்பி யுள்ளோம்” இவ்வாறு சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் கூறியுள்ளார். அது மட்டுமன்றி, “நரேந்திர மோடி தனது காசி வழித்தட திட்டத்திற்காக பல நூற்றாண்டுகள் பழைமையான கோவில் களை இடித்து அதில் இருந்த சிலை களை குப்பையில் போட்டார்” என்றும் சங்கராச் சாரியார் பரபரப்புக் குற்றச்சாட்டை எழுப்பியுள் ளார். பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிச்ச லானந்த சரஸ்வதியும் இதையே கூறியுள்ளார். “சங்கராச் சாரியார்கள் தங்கள் கண்ணியத்தை உயர்த்திப் பிடிக்கிறார்கள். இது ஈகோ அல்ல. பிரதமர் ராம் லல்லா சிலையை (குழந்தை ராமர் சிலை) நிறுவும் போது நாங்கள் வெளியில் அமர்ந்து கைதட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா? கும்பாபி ஷேக விழாவில் மதச்சார்பற்ற அரசு பங்கேற்க வேண்டும் என்பதற்காக பாரம்பரியத்தை அழிக்க வேண்டும் என்பது அர்த்தம் அல்ல” என்று அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: ‘தீக்கதிர்’ 17-1-2024

No comments:

Post a Comment