பரவாயில்லையே! மனுவில் ஜாதி, மதம் கூடாது உச்ச நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 30, 2024

பரவாயில்லையே! மனுவில் ஜாதி, மதம் கூடாது உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜன. 30- ‘நீதிமன்ற வழக்குகளில், மனுதாரர் களின் ஜாதி அல்லது மதத்தை குறிப்பிடும் நடைமுறை இனி தவிர்க்கப்பட வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
ராஜஸ்தான் குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, கணவன் – மனைவி இடையிலான சச்சரவு தொடர்பான வழக்கை, இடமாற்றம் செய்யும் மனுவை விசாரணைக்கு ஏற்ற போது, உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இது குறித்து நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, அசானுதீன் அமானுல்லா அமர்வு பிறப்பித்த உத்தரவு:
உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்கு களில், வாதி – பிரதிவாதியின் ஜாதி அல்லது மதம் தொடர்பான விவரங்கள் இடம் பெறுவது தவிர்க்கப்பட வேண்டும்.

இதுபோன்ற நடைமுறைகள் வழக்கு விசாரணைக்கு தேவையற்றதாக நீதிமன்றம் கருதுகிறது. இனி வரும் காலங்களில், வாதி – பிரதிவாதிகளின் ஜாதி, மத விபரங் களை மனுவில் குறிப்பிடும் வழக்கத்தை நீதிமன்றங்கள் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு உத்தர வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment