குடியுரிமை திருத்த சட்டம் ஒரு வாரத்தில் அமலாம்! ஒன்றிய இணையமைச்சர் கூறுகிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 30, 2024

குடியுரிமை திருத்த சட்டம் ஒரு வாரத்தில் அமலாம்! ஒன்றிய இணையமைச்சர் கூறுகிறார்

கொல்கத்தா, ஜன. 30- பாஜக தலைமையி லான ஒன்றிய அரசால் கடந்த 2019இல் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) கொண்டுவரப்பட்டது. வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக கடந்த 2014 டிசம்பர் 31ஆ-ம் தேதிக்கு முன் இந்தியா வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், ஜெயினர்கள் மற்றும் பவுத்தர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது. இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. வரும் மக்களவை தேர்தலுக்கு முன் சிஏஏ-வுக்கான விதிமுறைகள் வெளியாகும் என தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், ஒன்றிய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்குர்நேற்று (29.1.2024) கொல்கத்தா வில் செய்திசேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “சிஏஏ விரைவில் அமல்படுத்தப்படும், இந்த சட்டம் இன்னும் ஏழு நாட்களுக்குள் செயல்படுத்தப்படும். இது நான் அளிக்கும் உத்தரவாதம்” என்றார்.
சாத்தனு தாக்குர், மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், போங்கான் தொகுதி பாஜக நாடாளு மன்ற உறுப்பினர் ஆவார். மேலும் இவர், இத்தொகுதியில் பெரும்பான்மை யாக வசிக்கும் மதுவா சமூகத்தின் தலை வர் ஆவார். இந்த சமூகத்தினர் வங்க தேசத்தில் இருந்து மத துன்புறத்தல் காரணமாக 1950-களில் இந்தியாவுக்கு வந்தவர்கள் ஆவர். இவர்கள் இந்த சட்டத்தால் பலன் அடைவார்கள் என கூறப்படுகிறது.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் குணால் கோஷ் கூறும்போது, “மேற்கு வங்கத்தில் சிஏஏஅமல்படுத்தப்படாது என எங்கள்தலைவர் மம்தா தெளிவுபடுத்திவிட்டார். மக்களவை தேர்தலுக்கு முன் பாஜகவினர் இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அரசியல் லாபம் பெற முயற்சிக்கின்றனர்” என் றார். குடியுரிமை விவகாரத்தை அரசி யல் ஆதாயத்திற்காக பாஜக பயன்படுத் துவதாக மம்தா குற்றம்சாட்டி. வரு கிறார்.
இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் கொல்கத் தாவில் பேசும்போது, “சிஏஏ இந்த மண் ணின் சட்டம். அதனை அமல்படுத்துவது தவிர்க்க முடியாதது. மக்களை மம்தா தவறாக வழிநடத்துகிறார்” என்றார். நாடாளுமன்ற நடைமுறைகளின்படி எந்தவொரு சட்டத்துக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த 6 மாதங்களுக்குள் அதற்கான விதிகள் வகுக்கப்பட வேண்டும். ஆனால் சிஏஏ-வை பொறுத்தவரை இந்த காலக் கெடுவை ஒன்றிய அரசு கடந்த 2020 முதல் தொடர்ந்து நீட்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment