கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 31, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

31.1.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை

* ‘பீகாரில் சமூக நீதிக்காக மகாகத்பந்தன் கூட்டணி தொடர்ந்து போராடும். இதற்கு முதலமைச்சர் நிதிஷ்குமார் தேவையில்லை’ என நீதி நடைப்பயணத்தில் ராகுல் காந்தி பேச்சு.
* சமூக நீதி தான் தமிழ் நாட்டு மக்களின் அடையாளம்; ஜாதியோ, மதமோ அல்ல, சட்டமன்றத் தலைவர் மு.அப்பாவு
* தமிழ்நாட்டில் முதலமைச்சர் அறிவித்த, அதிகாரிகள் கிராமங்களில் ஒரு நாள் தங்கி குறை தீர்க்கும் முறை ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் எனும் திட்டம்’ இன்று முதல் தொடக்கம்.
* அயோத்தி தவிர்த்து, 1947-க்கு முன்பு இருந்த நிலையை மாற்றி வழிபாட்டுத் தலங்களில் எந்த மாற்றமும் கூடாது என்ற 1991 சட்டத்தை பாஜக – ஆர்.எஸ்.எஸ். குழி தோண்டி புதைத்து வருகிறது என சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

* பாஜக எதிர்க்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நிதிஷ் குமாரும் விரும்பவில்லை. எங்கள் கூட்டணி வற்புறுத்தியதால் அதனை மேற்கொண்டார். அதன் காரணமாகவே பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ளார் என ராகுல் காந்தி தாக்கு.
* சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குசீட்டில் பேனாவால் எழுதி செல்லாத ஓட்டாக்கிய அதிகாரி: தில்லுமுல்லு செய்து பாஜ வெற்றி. இதன்படி மக்களவைத் தேர்தலில் பாஜக என்ன செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள் என ஆம் ஆத்மி, காங். குற்றச்சாட்டு. டில்லி உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு.
* ஹிந்துக்கள் அல்லாதவர்கள், நாத்திகர்கள் பழனி கோயிலில் நுழைய தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சிறீமதி உத்தரவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

*ஹனுமன் கொடி அகற்றம்; கோட்சேவின் சந்ததியினர் அமைதியைக் குலைப்பதாக கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கண்டனம்.

தி டெலிகிராப்:

* இந்தியாவின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் முக்கிய அளவீடுகள் – மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, உற்பத்தி மறுமலர்ச்சி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடு – உண்மையில், தொடர்ந்து பின்னடவை சந்தித்து வருகின்றன என்கிறார் பிரின்ஸ்டன் பல்கலைக் கழக பேராசிரியர் அசோகா மோடி.
* மத உணர்வை தூண்டி நாடு முழுவதும் உள்ள மக்கள் மீது மத நடைமுறைகளை திணிக்க பாஜக – காவிக் கூட்டம் முயற்சிப்பதாக மம்தா குற்றச்சாட்டு.

– குடந்தை கருணா

 

No comments:

Post a Comment