பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் இந்தியாவில் இனி தேர்தலே நடக்காது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 31, 2024

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் இந்தியாவில் இனி தேர்தலே நடக்காது

featured image

காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

புவனேசுவரம்,ஜன.31- நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. குறிப்பாக பா.ஜ.க., காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மக்களவை தேர்தலுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் காங்கிரஸ் கட்சியின், முதல் மாநில அளவிலான கட்சி நிர்வாகிகள் கூட்டம் தெலங்கானாவில் கடந்த 25-ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பல மாநிலங்களில் நடக்க இருக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கான தேதியை காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேசுவரில் காங்கிரஸ் மாநில அளவிலான கட்சி நிர்வாகிகள் கூட்டம் (29.1.2024) நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கார்கே பேசியதாவது:-
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும் இருக்காது, தேர்தலும் இருக்காது, சர்வாதிகாரம் மட்டுமே இருக்கும். அமலாக்கத்துறை அனைவ ருக்கும் நீதிபதி அனுப்புகிறது. அவர்கள் அனைவரையும் சீண்டிப்பார்க்கின்றனர். பயத்தின் காரணமாக சிலர் நட்பை பிரிக்கின்றனர், சிலர் கட்சியை பிரிகின்றனர், சிலர் கூட்டணியில் இருந்து பிரிகின்றனர். தேர்தலில் வாக்களிக்க இதுதான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு, இதன்பின் வாக்களிக்க தேர்தல் இருக்காது’ என்றார்.

No comments:

Post a Comment