தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாட்டம் தமிழ்நாடு அரசு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 31, 2023

தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாட்டம் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, டிச.31- தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 தேதியை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழி சட்ட வாரம், ஒருவார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆட்சிமொழி சட்ட வாரம், சென்னை மாவட்டத்தில் கடந்த 18-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டது. 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதிவரை வரை கலைப்பண்பாட்டு இயக்கக கூட்டஅரங்கத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

முதல் நாளில் ஆட்சிமொழி சட்ட வரலாறு என்ற தலைப் பில் மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாவுதீன் பயிற்சி அளித்தார். ஆட்சிமொழி சட்ட வாரத்தில் ஒரு நிகழ்வாக வணிக நிறு வனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வலியுறுத்தப்பட்டது. கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவ கங்கள் ஆகியவற்றில் பெயர் பலகைகளை சரியாகத் தமிழ் சொற்களில் எழுதி வைக்கும் பொருட்டு, வணிகர் சங்கங்களின் கூட்டம் நடத்தப்பட்டது.

27-ஆம் தேதியன்று ஆட்சிமொழி சட்ட வார விழிப் புணர்வு பேரணியை சென்னை மாநில கல்லூரியில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் தொடங்கி வைத்தார். இப்பேர ணியில் மாநில கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாநில கல்லூரியில் படிக்கும் 300 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அதிகரித்து வரும் தொற்று: சென்னையில், கரோனா சிகிச்சைக்காக தனி வார்டுகள்

 

No comments:

Post a Comment