அயன்சிங்கம்பட்டியில் திராவிடர்கழக கிளை தோற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 31, 2023

அயன்சிங்கம்பட்டியில் திராவிடர்கழக கிளை தோற்றம்

featured image

நெல்லை, டிச. 31- திருநெல்வேலி மாவட்டம் அயன்சிங்கப்பட்டியில் அறிவாசான் தந்தை பெரியார் நினைவுநாளன்று (24.12.2023) திரா விடர்கழக புதிய கிளை தொடங்கப்பட்டது.
மாவட்ட இளைஞரணி தலைவர் முன்.தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தார். கழகக் காப்பாளர் இரா.காசி,மாவட்டச்செயலாளர் இரா.வேல்முருகன், மாவட்ட மாணவர் கழக தலைவர் செ.சூரியா, நெல்லை பகுதி செயலாளர் மகேசு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

மாவட்ட திராவிடர்கழக தலைவர் ச.இராசேந்திரன் புதிய பொறுப்பாளர்களை அறிவித்தார்.
மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார்.
புதிய பொறுப்பாளர்கள்: தலைவர்: எஸ்.பிரபாகரன், செயலாளர்: சண்முகம், அமைப்பாளர்: மகாராசா

No comments:

Post a Comment