ஜனவரியில் எஞ்சிய பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி : மேயர் ஆர்.பிரியா தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 31, 2023

ஜனவரியில் எஞ்சிய பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி : மேயர் ஆர்.பிரியா தகவல்

சென்னை,டிச.31- சென்னையில் எஞ்சியுள்ள பகுதிகளில் வரும் ஜனவரி மாதம் முதல் மழைநீர் வடி கால் அமைக்கும் பணிகள் தொடங் கும் என மேயர் ஆர். பிரியா தெரிவித்தார்.
அமைதி காத்து மரியாதை

சென்னை மாநகராட்சியின் டிசம்பர் மாதத்துக்கான மாதாந் திர மன்றக்கூட்டம், ரிப்பன் மாளி கையில் உள்ள கூட்ட அரங்கில் நேற்றுமுன்தினம் (29.12.2023) நடந்தது. கூட்டத்துக்கு மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு 2 நிமிடங்கள் அமைதி காத்து மரியாதை செலுத்தப் பட்டது.
பின்னர் கேள்வி நேரத்தின் போது மண்டல குழு தலைவர் கணேசன் (தி.மு.க.) பேசியதாவது:-

மழைநீர் வடிகால்

தற்போது பெய்த கனமழையால் எண்ணூர் நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்க வல் லுநர்கள் குழுவை அழைத்து மழைநீர் தேங்காமல் வெளியே செல்லும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கலைஞர் கருணாநிதி நகர், பரமேஸ்வரி நகரில் வீடுகளுக்குள் மழைநீர் சென்றுவிட்டது. இந்த சூழல் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.
மேயர் பிரியா: மழைநீர் வடிகால்கள் அமைத்த இடங்களில் நல்ல தீர்வு கிடைத்துள்ளது. கால் வாய் கரையோரம் உள்ள பகுதிகள் அடுத்த ஆண்டுக்குள் சீரமைக்கப் படும்.

ஆலோசனைக் கூட்டம்

துணை மேயர் மகேஷ்குமார்: கவுன்சிலர்களின் வார்டில் எங் கெல்லாம் மழைநீர் வடிகால் தேவைப்படுகிறதோ அதுகுறித்து தகவல் கேட்க வேண்டும். இது குறித்து ஆலோசனைக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.
மேயர் பிரியா: குறிப்பிட்ட பகுதி மணற்பகுதி என்பதால், பழைய மழைநீர் வடிகாலை இடித்துவிட்டு புதிய மழைநீர் 3 வடிகாலை அமைக்க சென்னை அய்.அய்.டி. அல்லது அண்ணா பல்கலைக் கழகத்திலிருந்து கலந் தாளுநர்கள் நியமிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
காலநிலை மாற்றம்

மேயர் பிரியா: காலநிலை மாற்றத்தால் பருவமழை காலங் களில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து வரக்கூடிய நாட்களில் கவுன்சிலர்கள், அதிகாரிகள் இணைந்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனவரி முதல்..

42-ஆவது வார்டு கவுன்சிலர் ரேணுகா (இந்திய கம்யூனிஸ்டு கட்சி); காலநிலை மாற்றத்தால் வரும் காலங்களில் அதீத மழை பெய்யும் என வல்லுநர்கள் கூறி யுள்ளார்கள். வரும் காலங்களில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி மேற்கொள்ள இருக் கும் நடவடிக்கைகள் என்ன?
மேயர் பிரியா: இந்த ஆண்டே மழைநீர் வடிகால் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இந்த ஆண்டும் நாம் எதிர்பார்த்ததைவிட அதிக மழை பெய்தது. மழைநீர் வடிகால் முடிந்த இடங்களில் 3 மணி நேரத்தில் தண்ணீர் வெளியேறிவிட்டது. ஒரு வாரத்தில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது. மீதம் உள்ள பகுதிகளில் ஜனவரி மாதம் முதல் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கும். கவுன்சிலர்கள் கேட்டுக்கொண்ட இடங்களிலும் புதிதாக மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
இதையடுத்து சென்னை 3 மாநகராட்சி பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்புகளின் போது மாணவர்களுக்கு சிற்றுண்டியாக சுண்டல் வழங்க அனுமதி, மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் உடலை கோயம்பேடு தே.மு.தி.க. அலுவலகத்தின் பின்புறத்தில் அடக்கம் செய்ய அனுமதி உள் ளிட்ட 39 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

No comments:

Post a Comment