அறிவியல் இயக்க வட்டார மாநாட்டில் அறிவியல் பூங்கா அமைக்க தீர்மானம் நிறைவேற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 31, 2023

அறிவியல் இயக்க வட்டார மாநாட்டில் அறிவியல் பூங்கா அமைக்க தீர்மானம் நிறைவேற்றம்

featured image

கந்தர்வக்கோட்டை, டிச. 31- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றி யம் தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டார மாநாடு அரசு நடுநிலைப்பள்ளி கந்தர்வகோட்டையில் வட்டார தலைவர் ரஹ் மத்துல்லா தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட இணை செயலாளர் துரையரசன் அனைவரையும் வரவேற்றார்.
வட்டார செயலாளர் சின்னராஜா வேலை அறிக்கை சமர்ப்பித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுகந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்ன துரை பேசுகையில், கந் தர்வகோட்டை பகு தியை அறிவுப் பூர்வமாக வளர்த்தெடுக்கவே புதிதாக புதிய நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் , போட்டி தேர்வுகள் எழுதும் மாணவர்கள் கட்டணமின்றி பயன் பெறும் வகையில் விரை வில் புதிய நூலகத்தையும், சட்ட மன்ற உறுப்பினர் அலுவலக மாடிப்பகுதி யையும் இணைத்து விரை வில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகை யில் கட்டணமில்லா தேர்வுகள் பயிற்சி மய்யம் உருவாக்கப்படும். இதை இளைய தலைமுறையினர் அனைவரும் பயன் படுத்தி அரசு வேலைகள் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
முன்னதாக மாநாட்டை அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் மணவாளன் தொடங்கி வைத்து பேசினார்.
சமூக மாற்றத்திற்கான அறிவியல் எனும் தலைப் பில் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் பேசினார். இம்மாநாட்டில் கந்தர்வ கோட்டை பகுதியில் அறிவியல் பூங்கா அமைத் துத்தர வேண்டும் எனப் பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் வட்டார தலைவராக துரையரசன், வட்டார செயலாளராக ரகம துல்லா, பொருளாளராக தங்கராசு, இணைச் செய லாளர்கள், துணைத் தலைவர்கள், உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர் கள் தேர்ந் தெடுக்கப்பட் டனர். இவர்களை அறி முகம் செய்து அறிவியல் இயக்க மாவட்ட தலை வர் வீரமுத்து வாழ்த்தி பேசினார்.
முன்னதாக அறிவி யல் இயக்கத்தில் செயல் பட்ட மூத்த முன்னோடி கள் பழனியாண்டி உள் ளிட்டோர் பாராட்டப் பட்டனர். மாநாட்டில் பேராசிரியர் பிச்சை முத்து, மாவட்ட செயற் குழு உறுப்பினர் சிவானந் தம், தலைமை ஆசிரியர் கள் விஜயலட்சுமி, கீதா, சேகர், ஆசிரியர்கள் தவச் செல்வம், புவனேஸ்வரி, பாக்கியராஜ், அண்ட னூர் சுரா, சண்முகம், வெள்ளைச்சாமி உள் ளிட்டோர் கலந்துகொண் டனர். நிறைவாக பொருளாளர் தங்கராசு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment