சென்னை இயல்பு நிலைக்கு திரும்புகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 8, 2023

சென்னை இயல்பு நிலைக்கு திரும்புகிறது

featured image

அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா எச்சரிக்கை

சென்னை, டிச.8- வெள்ளப் பாதிப் புகளை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா எச்சரிக்கை விடுத் துள்ளார்.
சென்னையில் வெள்ள சீர மைப்பு மற்றும் நிவாரணப் பணி கள் குறித்து தலைமைச் செயலகத் தில் 6.12.2023 அன்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதல்-அமைச்சரின் செயலாளர்- முரு கானந்தம், டான்ஜெட்கோ தலை வர் ராஜேஷ் லக்கானி, உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, நகராட்சி நிர்வாகத் துறை முதன் மைச் செயலா ளர் கார்த்திகேயன், பால்வளத்துறை கூடுதல் தலை மைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா ஆகியோர் கூட்டாக செய் தியாளர்களுக்கு பேட்டி அளித் தனர். அப்போது அவர்கள் கூறிய தாவது:-
நீர்நிலைகள் அனைத்தும் கட் டுப்பாட்டில் உள்ளன. மின்துறை, தீயணைப்பு, காவல்துறை, நெடுஞ்சாலைத் துறையினர் என 75 ஆயி ரம் பேர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங் களில் 372 நிவாரண முகாம்களில் இருப்பவர்கள் மற்றும் வீடுகளில் இருப்பவர்களுக்கு 37 லட்சம் உண வுப் பொட்டலங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. இந்த மழையினால் 806இடங்களில் தண்ணீர் தேங்கியது.
அங்கிருந்து 19 ஆயிரத்து 806 பேர் படகு உள்ளிட்டவை மூலம் மீட்கப்பட்டு, முகாம்களுக்கு அனுப் பப்பட்டனர்.
ஹெலிகாப்டர் மூலம் 6.12.2023 அன்று 4 முறை பெரும்பாக்கம், மடிப்பாக்கம் காஞ்சிபுரம் மாவட் டத்தில் மற்றும் வடசென்னை பகுதிகளில் 25 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
சென்னையில் மொத்தம் 4 பேர் (3 பேர் மரம் விழுந்தும், ஒருவர் மின்சாரம் தாக்கியும்) உயிரிழந்து விட்டனர். செங்கல்பட்டில் 5 பேர் (ஒருவர் மின்சாரம் தாக்கியும், ஒருவர் வெள்ளத்தாலும், 3 பேர் சுவர் இடிந்து விழுந்தும்) மரண மடைந்துவிட்டனர்.
அந்த வகையில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். 311 கால் நடைகள் இறந்துவிட்டன. 378 குடிசைகள் முழுமையாகவும், 335 குடிசைகள், 88 வீடுகள் பகுதி யாகவும் சேதமடைந்துள்ளன.
மின்சாரம் படிப்படியாக வினி யோகிக்கப்பட்டு வருகிறது. சென் னையில் 4 சதவீதம் பகுதிக்கு மட் டும் மின்சாரம் தரப்படவில்லை.
சென்னையில் வழக்கமாக 19 லட்சம் லிட்டர் பால் வினி யோகிக் கப்படும். 6.12.2023 அன்று 14 லட் சம் லிட்டர் (ஆவின் 10 லட்சம், தனியார் 4 லட்சம்) வழங்கப்பட் டது. 8 மாவட்டங்களில் இருந்து 650 கிலோ பால்பவுடர் வினி யோகிக்கப்படுகிறது. 50 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படு கின்றன.
சென்னையில் உள்ள 900 பெட் ரோல் விற்பனை நிலையங்களில் 830 செயல்பட்டு வருகின்றன. மற்ற 70 விற்பனை நிலையங்களில் 50 சத வீதம் விரைவில் சரியாகிவிடும்.
திருவள்ளூரில் 87 சதவீதம், சென்னை, செங்கல்பட்டு மாவட் டங்களில் 84 சதவீதம் போக்கு வரத்து சீராகிவிட்டது.மெட்ரோ ரயில் சரியாக இயங்கி வருகிறது.
வெள்ள நிவாரணப் பணிகளை முதலமைச்சர் 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறார். மொத் தமாக நாங்கள் சொல்ல வருவது, பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். தேவைக்கு மேல் உணவுகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கிவைக்க வேண்டாம்.
விரைவில் இயல்பு நிலை திரும்பிவிடும். ‘மினரல் வாட்டர் கேன்’களை வியாபாரிகள் யாரும் அதிகபட்ச சில் லரை (எம்.ஆர்.பி.) விலைக்கு மேல் விலை வைத்து விற்கக் கூடாது. வெள்ள பாதிப்பு களை பயன்படுத்தி அத்தியாவசியப் பொருட்களை எதை யும் யாரும் புதுக்கி வைக்கக் கூடாது.
இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக் கப் படும் என்று எச்சரிக்கிறோம். -இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment