கொளத்தூர் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருள்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 7, 2023

கொளத்தூர் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருள்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்!

featured image

சென்னை, டிச.7 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (6.12.2023) கொளத்தூர் பகுதிகளில் ‘மிக்ஜாம்’ புயலினால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி, அரிசி, போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களையும் வழங்கினார்.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட ஓட்டேரி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார். பின்னர், ஓட் டேரி, நல்லான் கால்வாயில் நீர்வரத்தினை பார்வையிட்டார்.
தொடர்ந்து, குக்ஸ் சாலை பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி, அவர்களுக்குத் தேவையான அத்தி யாவசியப் பொருள்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை படகுகளில் அனுப்பி வைத்தார்.
பின்னர், அகரம் – ஆனந்தன் பூங்கா, பாலாஜி நகர் முக்கிய சாலை மற்றும் செல்வி நகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி, அம்மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களையும் வழங்கி னார்.
கொளத்தூர் பகுதிகளில் வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்த தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப் படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு நீரை வெளியேற்றி, வெள்ளநீர் வடிந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு உடனடியாக மின்சாரம் வழங்கிட வேண்டுமென்று அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (6.12.2023) குக்ஸ் சாலை பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காகத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை படகுகளில் அனுப்பி வைத்தார். உடன் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

ஓட்டேரி, நல்லான் கால்வாயில் நீர்வரத்தினை பார்வையிட்டார் முதலமைச்சர்
முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (6.12.2023) ஓட்டேரி, நல்லான் கால்வாயில் நீர் வரத்தினை பார்வையிட்டார். உடன் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்
ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (6.12.2023) அகரம் -ஆனந்தன் பூங்கா அருகில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி, அரிசி, போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களையும் வழங்கினார். உடன் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (6.12.2023) ஓட்டேரி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, அங்குள்ள மக்களுக்கு உணவு, உடை, போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார். உடன் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி ஆகியோர் உள்ளனர்.

No comments:

Post a Comment