ஹிந்து ராம ராஜ்ஜியம் நடக்கிறதா? ‘பள்ளன்' என்று ஜாதிப் ஹிந்து ராம ராஜ்ஜியம் நடக்கிறதா? ‘பள்ளன்' என்று ஜாதிப் பெயரோடு அழைப்பாணை அனுப்பிய அமலாக்கத் துறை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 31, 2023

ஹிந்து ராம ராஜ்ஜியம் நடக்கிறதா? ‘பள்ளன்' என்று ஜாதிப் ஹிந்து ராம ராஜ்ஜியம் நடக்கிறதா? ‘பள்ளன்' என்று ஜாதிப் பெயரோடு அழைப்பாணை அனுப்பிய அமலாக்கத் துறை!

featured image

வீட்டின் முகவரி தெரியவில்லை என்றால் அவர் ஜாதிப் பெயரை ஹிந்து பள்ளர் என்று அஞ்சலில் எழுதி அனுப்புகிறது ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை.
60 ஆண்டுகளாகத் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் தீவிரமாகப் போராடி இந்தத் திராவிட நாட்டில் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயர் போடுவதை நீக்கியுள்ளனர்; அதை இந்தப் பாசிச பாஜக அரசு தவறான வழிகளில் உள்நுழைத்துப் புதுப்பிக்கும் வேலையை தனது அரசியல் கூட்டாளியான (ஏஜெண்ட்) அமலாக்கத் துறையின் மூலம் மீண்டும் செய்யத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டை சீர் குலைத்தே ஆகவேண்டும் என்ற உச்சக்கட்ட வெறியில் களமிறங்கியுள்ளது.
ராமநாயக்கன்பாளையம் வடக்கு காடு அப்பம் சமுத்திரம் கிராமம் – சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மலைகள் சூழ்ந்த அழகிய கிராமம். அங்கு தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த முதியோர்களான கண்ணய்யன், கிருஷ்ணன் என்ற சகோதர விவசாயி களுக்கு ஆறரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் பாஜகவின் சில முக்கிய புள்ளிகள் ஈடுபட்டு வந்துள்ளனர்! இவர்கள் நிலத்தை தர மறுத்ததனால், பயிர் வைக்கவிடாமலும் தடுத்துள்ளனர். வேறு வருமான மில்லாமல் இவர்கள், அரசு தரும் முதியோர் உதவித் தொகை ஆயிரம் ரூபாயைக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
மலை முகப்பில் இருக்கும் அப்பாவி ஏழை விவசாயிகளின் துண்டு நிலத்தைச் சுற்றியுள்ள பகுதி நிலங்களை அடிமாட்டு விலை கொடுத்து அந்த நிலத்தை அபகரித்து விட்டு, ஏழை விவசாயிகளை நில உரிமையில் இருந்து வெளியேற்றுவது தான் பாஜகவினரின் சதித் திட்டம்!
இந்த வகையில் ஏற்கெனவே 100-க்கும் மேற்பட்ட ஏழை விவசாயிகளின் நிலங்களை அபகரிப்பு செய்து விட்டனர்! காலம் காலமாக தங்களுக்குச் சொந்தமான, தாங்கள் பயிரிட்டு வரும் தங்களது பூர்வீக விவசாய நிலங்கள், ‘‘தங்கள் சந்ததிக்குச் செல்ல வேண்டுமேயன்றி சந்தைக்கு அல்ல” என பிடிவாதமாக விவசாய நிலம் ஆறரை ஏக்கரை விற்க மறுத்து விட்டனர் கண்ணைய் யன், கிருஷ்ணன் சகோதரர்கள்! நிலத்தை விற்க மறுப்பு தெரிவித்ததால், பாஜகவினர் இந்த ஏழை விவசாயிகளை விவசாயம் செய்ய விடாமல் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் தடுத்துத் தொல்லை கொடுத்தனர்.
இந்நிலையில் கண்ணையன், கிருஷ்ணன் சகோதரர் களுக்கு அமலாக்கத் துறையில் இருந்து கருப்புப் பண பரிமாற்ற மோசடி மற்றும் கருப்புப் பணத்தில் இருந்து சொத்து வாங்கியதாக சென்னை அமலாக்க துறையில் இருந்து அழைப்பாணை விடுக்கப்பட்டது.
ஜுலை 5 ஆம் தேதி 2023 அன்று, சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத் தில் கண்ணையன், கிருஷ்ணன் சகோதரர்கள் நேரில் வரவேண்டும் என்றும், நேரில் ஆஜராகும் போது, அசல் சொத்துப் பத்திரங்கள், இதர நில ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள்,வருமான வரி தாக்கல் விவரங்கள் என அனைத்து ஆவணங்களுடன் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், தவறினால் அமலாக்கத் துறை – விவசாயிகள்மீது நடவடிக்கை மேற்கொண்டு, சொத்து களை, நிலங்களை எவ்வித விளக்கமும் இன்றி பறிமுதல் செய்யும் என்றும் அழைப்பாணை அனுப்பி இருந்தது!

அப்படி அனுப்பிய அழைப்பாணையின் முகவரியில் தான் ஹிந்து பள்ளர் என்று ஜாதிப் பெயர் குறிப்பிட்டு எழுதியுள்ளது. என்ன திமிர்? என்ன ஆணவம்?
விவசாயிகள் இருவரும் எழுதப் படிக்கத் தெரி யாதவர்கள்; அவர்கள் வழக்குரைஞர் உதவியோடு சாஸ்திரிபவன் சென்றனர். அமலாக்கத் துறையினர் வழக்குரைஞரை அனுமதிக்காமல், எழுதப் படிக்கத் தெரியாத விவசாயிகளை மட்டுமே விசாரணைக்கு உள்ளே வரவேண்டும் என்று அடாவடி விடுத்தனர்.
இதனை அடுத்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குரைஞர் புகார் தெரிவிக்க, காவல்துறையினர் விசாரணைக்கு வந்த போது, ‘‘முதலமைச்சரே எங்கள் அதிகாரத்திற்குள் தான்” என்று திமிராகப் பேசினர் அமலாக்கத் துறை அதிகாரிகள்.

அமலாக்கத் துறையின் நோக்கம் அவர்களிடமிருந்து சொத்துகளைப் பிடுங்கி பாஜக பிரமுகர் கையில் ஒப் படைப்பதுதான் என்பதைத் தெரிந்துகொண்ட அந்த விவசாயிகள், வழக்குரைஞர் துணையோடு சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு (டிசம்பர் 17) சென்று காவல்துறை உயர் அதிகாரிகளிடம் ‘‘அமலாக்கத் துறையினர் எவ்வித உண்மை காரணங்களும் இன்றி, ஏழை விவசாயிகளான எங்களின் நிலத்தை அபகரிப்பு செய்யும் நோக்கத்தில் ஈடுபடுகின்றனர்” என்று புகார் அளித்தனர்.
இதுவரை பணபலம், ரவுடிகள் பலத்தைக்காட்டி மிரட்டி வந்த பாஜகவினர் தற்போது அமலாக்கத் துறை யினரையும் வைத்து ஏழை மக்களின் சொத்துக்களைப் பிடுங்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

அழைப்பாணை அனுப்பிய அமலாக்கத் துறை!வீட்டின் முகவரி தெரியவில்லை என்றால் அவர் ஜாதிப் பெயரை ஹிந்து பள்ளர் என்று அஞ்சலில் எழுதி அனுப்புகிறது ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை.

60 ஆண்டுகளாகத் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் தீவிரமாகப் போராடி இந்தத் திராவிட நாட்டில் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயர் போடுவதை நீக்கியுள்ளனர்; அதை இந்தப் பாசிச பாஜக அரசு தவறான வழிகளில் உள்நுழைத்துப் புதுப்பிக்கும் வேலையை தனது அரசியல் கூட்டாளியான (ஏஜெண்ட்) அமலாக்கத் துறையின் மூலம் மீண்டும் செய்யத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டை சீர் குலைத்தே ஆகவேண்டும் என்ற உச்சக்கட்ட வெறியில் களமிறங்கியுள்ளது.
ராமநாயக்கன்பாளையம் வடக்கு காடு அப்பம் சமுத்திரம் கிராமம் – சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மலைகள் சூழ்ந்த அழகிய கிராமம். அங்கு தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த முதியோர்களான கண்ணய்யன், கிருஷ்ணன் என்ற சகோதர விவசாயி களுக்கு ஆறரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் பாஜகவின் சில முக்கிய புள்ளிகள் ஈடுபட்டு வந்துள்ளனர்! இவர்கள் நிலத்தை தர மறுத்ததனால், பயிர் வைக்கவிடாமலும் தடுத்துள்ளனர். வேறு வருமான மில்லாமல் இவர்கள், அரசு தரும் முதியோர் உதவித் தொகை ஆயிரம் ரூபாயைக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
மலை முகப்பில் இருக்கும் அப்பாவி ஏழை விவசாயிகளின் துண்டு நிலத்தைச் சுற்றியுள்ள பகுதி நிலங்களை அடிமாட்டு விலை கொடுத்து அந்த நிலத்தை அபகரித்து விட்டு, ஏழை விவசாயிகளை நில உரிமையில் இருந்து வெளியேற்றுவது தான் பாஜகவினரின் சதித் திட்டம்!
இந்த வகையில் ஏற்கெனவே 100-க்கும் மேற்பட்ட ஏழை விவசாயிகளின் நிலங்களை அபகரிப்பு செய்து விட்டனர்! காலம் காலமாக தங்களுக்குச் சொந்தமான, தாங்கள் பயிரிட்டு வரும் தங்களது பூர்வீக விவசாய நிலங்கள், ‘‘தங்கள் சந்ததிக்குச் செல்ல வேண்டுமேயன்றி சந்தைக்கு அல்ல” என பிடிவாதமாக விவசாய நிலம் ஆறரை ஏக்கரை விற்க மறுத்து விட்டனர் கண்ணைய் யன், கிருஷ்ணன் சகோதரர்கள்! நிலத்தை விற்க மறுப்பு தெரிவித்ததால், பாஜகவினர் இந்த ஏழை விவசாயிகளை விவசாயம் செய்ய விடாமல் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் தடுத்துத் தொல்லை கொடுத்தனர்.

இந்நிலையில் கண்ணையன், கிருஷ்ணன் சகோதரர் களுக்கு அமலாக்கத் துறையில் இருந்து கருப்புப் பண பரிமாற்ற மோசடி மற்றும் கருப்புப் பணத்தில் இருந்து சொத்து வாங்கியதாக சென்னை அமலாக்க துறையில் இருந்து அழைப்பாணை விடுக்கப்பட்டது.
ஜுலை 5 ஆம் தேதி 2023 அன்று, சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத் தில் கண்ணையன், கிருஷ்ணன் சகோதரர்கள் நேரில் வரவேண்டும் என்றும், நேரில் ஆஜராகும் போது, அசல் சொத்துப் பத்திரங்கள், இதர நில ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள்,வருமான வரி தாக்கல் விவரங்கள் என அனைத்து ஆவணங்களுடன் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், தவறினால் அமலாக்கத் துறை – விவசாயிகள்மீது நடவடிக்கை மேற்கொண்டு, சொத்து களை, நிலங்களை எவ்வித விளக்கமும் இன்றி பறிமுதல் செய்யும் என்றும் அழைப்பாணை அனுப்பி இருந்தது!

அப்படி அனுப்பிய அழைப்பாணையின் முகவரியில் தான் ஹிந்து பள்ளர் என்று ஜாதிப் பெயர் குறிப்பிட்டு எழுதியுள்ளது. என்ன திமிர்? என்ன ஆணவம்?
விவசாயிகள் இருவரும் எழுதப் படிக்கத் தெரி யாதவர்கள்; அவர்கள் வழக்குரைஞர் உதவியோடு சாஸ்திரிபவன் சென்றனர். அமலாக்கத் துறையினர் வழக்குரைஞரை அனுமதிக்காமல், எழுதப் படிக்கத் தெரியாத விவசாயிகளை மட்டுமே விசாரணைக்கு உள்ளே வரவேண்டும் என்று அடாவடி விடுத்தனர்.
இதனை அடுத்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குரைஞர் புகார் தெரிவிக்க, காவல்துறையினர் விசாரணைக்கு வந்த போது, ‘‘முதலமைச்சரே எங்கள் அதிகாரத்திற்குள் தான்” என்று திமிராகப் பேசினர் அமலாக்கத் துறை அதிகாரிகள்.

அமலாக்கத் துறையின் நோக்கம் அவர்களிடமிருந்து சொத்துகளைப் பிடுங்கி பாஜக பிரமுகர் கையில் ஒப்படைப்பதுதான் என்பதைத் தெரிந்துகொண்ட அந்த விவசாயிகள், வழக்குரைஞர் துணையோடு சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு (டிசம்பர் 17) சென்று காவல்துறை உயர் அதிகாரிகளிடம் ‘‘அமலாக்கத் துறையினர் எவ்வித உண்மை காரணங்களும் இன்றி, ஏழை விவசாயிகளான எங்களின் நிலத்தை அபகரிப்பு செய்யும் நோக்கத்தில் ஈடுபடுகின்றனர்” என்று புகார் அளித்தனர்.
இதுவரை பணபலம், ரவுடிகள் பலத்தைக்காட்டி மிரட்டி வந்த பாஜகவினர் தற்போது அமலாக்கத் துறை யினரையும் வைத்து ஏழை மக்களின் சொத்துக்களைப் பிடுங்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

No comments:

Post a Comment