
குமரிமாவட்ட கழகம் சார்பாக கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாள் விழா (2.12.2023) கருத்தரங்கம் மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத் தில் நடைபெற்றது. தந்தை பெரியார், தலைவர் கி.வீரமணி நூல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன், முன்னிலை வகித்து கருத்துரையாற்றினார். கழகக் காப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெரு மாள், பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ சிவதாணு, செயலாளர் பெரியார்தாஸ், செயலாளர் பா. பொன்னுராசன்; இளைஞர் அணி தலைவர் இராஜேஷ், தோவாளை ஒன்றிய தலைவர் மா.ஆறுமுகம் மற்றும் பெரியார் பற்றாளர்கள் விழாவில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment