ஏழைகளை வதைக்கும் ஒன்றிய அரசு வடமாநிலங்களில் ரயில் கட்டணம் பல மடங்கு உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 19, 2023

ஏழைகளை வதைக்கும் ஒன்றிய அரசு வடமாநிலங்களில் ரயில் கட்டணம் பல மடங்கு உயர்வு

புதுடில்லி, நவ 19 வடமாநிலங்களில் சூரியனைப் போற்றும் சாத் பூஜை கொண் டாடப்படுகிறது. சூரிய னுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 4 நாட்கள் இந்த விழா கொண்டாடப்படு கிறது. இந்த நாட்களில் பொதுமக்கள் நீர் நிலைகளில் நின்று சூரிய னை வழிபட்டு நன்றி தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விழா நாளை (20.11.2023)  வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில் சூரிய உதயம் மற்றும் சூரியமறைவின் போது மக்கள் வழிபடு வார்கள். பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் மிகுந்த உற் சாகத்துடன் இந்த விழா கொண்டாட ப்படுகிறது. 

இந்நிலையில் இந்த விழாவை முன்னிட்டு வடமாநிலங்களில் இது வரை இல்லாத வகையில் ரயில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட் டுள்ளது. அதே நேரத்தில் குறைவான கட்டணம் கொண்ட இரண்டாம் வகுப்பு  பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அதிக கட்டணம் கொண்ட குளிர்சாதன பெட்டிகள் அதிகம் இணைக்கப் பட்டுள்ளதாக குற்றச் சாட்டுகள் எழுந்து வருகின்றன. 

குறிப்பாக மும்பை - பாட்னா இடையே இயக்கப்படும் சுவிதா எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்படை கட்டணம் ரூ.2,950 ஆக இருந்த நிலையில் 'டைனமிக்' கட்டணம் என்ற பெய ரில் கூடுதலாக ரூ.6,555 வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. 

இந்த விழாவை கொண்டாட புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் களுக்கு பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரயில் கட்டண உயர்வால் பயணிகள் அவதி அடைந்துள்ள னர். மேலும் கடந்த ஏப்ரல் 1 முதல் செப் டம்பர் 30 வரை, ரயில்களில் முன்பதிவு பயணச்சீட்டு விற்பனை மூலம் ரயில்வே நிர்வாகம் ரூ.1,034 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காத்திருப்புப் பட்டி யலில் உள்ள பயணிகளின்  பயணச்சீட்டுகள்  ரத்து செய்யப்பட்டு, அதற்கு சேவை கட்டணமாக ரூ.83.85 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment