பணவீக்கம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது : ப.சிதம்பரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 19, 2023

பணவீக்கம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது : ப.சிதம்பரம்

சென்னை, நவ.19  மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சமூக வலை தளப் பக்கத்தில் கூறியிருப்ப தாவது:- 

"மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தின்" கீழ் வேலை கேட்போர் எண் ணிக்கை உயர்வது எதைச் சுட்டிக் காட்டுகிறது?. மொத்தக் குறியீட்டுப் பணவீக்கம் எதிர்மம் (மைனஸ்) ஆக இருப்பது எதைச் சுட்டிக் காட்டுகிறது?. ஒரு குடும்பத்தில் உள்ளவர் களுக்கு ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ தானியம் விலை இல்லாமல் தொடர்ந்து கொடுக்கப்படும் என்ற அரசின் முடிவு எதைச் சுட்டிக் காட்டுகிறது?. இந்த தரவுகளில் உள்ள சரியான பொருளை அரசின் ஆலோசகர்கள் புரிந்துகொள்ள வில்லை என்றால் இந்த ஒன்றிய அரசின் செயல்பாட்டில் பெரிய தவறு இருக்கிறது என்ற முடிவுக்கு வருவோம். இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார். 

விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் திட்டம் 

3 ஆண்டில் நிறைவடையும்

 மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

நாமக்கல், நவ.19 நாமக்கல்லை அடுத்த காவேட் டிப்பட்டியில் உள்ள குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தேசிய அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப் புகளின் கண்காட்சி நேற்று (18.11.2023) நடைபெற்றது. இதை இஸ்ரோ மேனாள் இயக்குநரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைத்தார். 

பின்னர், அவர் அளித்த பேட்டி: நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவின் முயற்சி விரைவில் நிறைவேறும். இந்தியாவை பொறுத்த வரை, விண்வெளிக்கு முதலில் மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டமானது, 3 ஆண்டுகளுக்குள் நிறை வடையும். அதற்கான முதற்கட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில், மனிதன் பயணிக்கும் வகையில் தயார் செய்யப்படுகிறது. விண் வெளிக்கு மனிதனை அனுப்பி வெற்றி பெற்ற பின்னரே, நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு இந்தியா தயாராகும். குலசேகரப்பட்டணத்தில் சிறிய கலன் களுக்கான ஏவுதளம் விரைவில் அமைக்கப்படும். அங்கு சிறிய செயற்கை கோள் தயாரிப்பு மய்யம் உள்ளிட்ட பணிகளை செய்யும் வகையில், அதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இதனால் போக்குவரத்து செலவு குறைந்து, விண்வெளி ஏவுதல் தொடர்பான தள வாடங்களை விரைவாக தயாரித்து பயன்படுத்த முடியும். இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

“பிரதமர் மோடிதான் சிறந்த நடிகர்”

- பிரகாஷ்ராஜ்

அய்தராபாத், நவ.19 தெலங்கானா தேர்தல் தொடர் பாக “டிவி 9 தெலுங்கு” என்ற தனி யார் செய்தி நிறுவனம் 5 செய்தியாளர்கள் கொண்ட அமர்வை அமைத்து நடிகரும், அரசியல் விமர்சகருமான பிரகாஷ்ராஜிடம் நேர்காணல்  எடுத்தது. 

இந்த நேர்காணலில் என்.டி.டி.வி. செய்தியாளர் ”நீங்களும், நடிகர் கமல்ஹாசனும் மிகச்சிறந்த நடிகர்களாக இருந்தும் அரசியலில் தோற்று இருக்கிறீர்கள். அப்படி யென்றால் உங்களைவிட  சிறந்த நடிகர்கள் அரசியலில் இருக்கிறார்களா?” என கேள்வி எழுப்பினார். 

இந்த கேள்விக்கு சிறிதும் தாமதிக்காமல் பிரகாஷ்ராஜ்,“மோடி இருக்கிறார்” எனக் கூறினார். இதுகுறித்து மேலும் அவர் கூறு கையில்,”மோடி சிறந்த நடிகர், மிகச் சிறந்த பேச்சாளர். அவர் தனக்காக மிகச்  சிறந்த ஆடை வடிவமைப்பாளர், சிகை அலங்கார வடிவமைப்பாளர் என எல்லாரையும்  வைத்திருக்கிறார்” என கூறினார். 

பிரகாஷ்ராஜின் இந்த அதிரடி பதிலால் வாயடைத்துப் போன 5 செய்தியாளர்களும் மேற்கொண்டு கேள்வி கேட் காமல் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். இந்த காட்சிப் பதிவு தேசிய  அளவில் டாப் டிரெண்டிங்கில் வலம் வருவதால் பாஜகவினர் அதிர்ச்சியில் உறைந்  துள்ளனர்.

பழங்குடியினரை இழிவுபடுத்தியது பாஜ கூட்டணியின் வக்கிரபுத்தி : நாராயணசாமி கண்டனம்

புதுச்சேரி, நவ.19 ஆளுநர், முதலமைச்சர் முன்னிலையில் பழங்குடியினரை இழிவுபடுத்தியது பாஜ கூட்டணியின் வக்கிரபுத்தியை காட்டுகிறது என்று மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுவை மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி: நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும். இது நாடாளுமன்ற தேர்த லுக்கான முன்னோட்டமாக இருக்கும். நாடாளுமன்ற தேர் தலில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். அப்போது பாஜவும், மோடியும் வீட்டுக்கு அனுப்பப் படுவார்கள்.

ரங்கசாமி ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று சொன்னார்கள். அறிவித்த திட்டங்களையே செயல்படுத்த முடியவில்லை. ஆனால் அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றி விட்டதாக முதலமைச்சர் ரங்கசாமி கூறுவது அப்பட்டமான பொய். வில்லியனூர் பெண் காவலர் தற்கொலை விவகாரத்தில் அவரது கணவரை கைது செய்துள்ளனர். இதில் பல மர்மங்கள் உள்ளது. தன் மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது தந்தை கொடுத்த புகாரை காவல்துறை ஏற்கவில்லை.

இதை விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும். எனவே காவல்துறை தலைமை இயக்குநர் நேரடியாக தலையிட்டு விசாரிக்க வேண்டும். பழங்குடியினரை கவுரவிக்கும் விழாவில் பழங்குடி மக்களுக்கு ஒரு இருக்கை கூட போடாமல் தரையில் அமர வைத்து இழிவு படுத்தியுள்ளனர். இது பாஜ கூட்டணியின் வக்கிரபுத்தியை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






No comments:

Post a Comment