அமெரிக்காவில் பட்டப் படிப்பு இந்திய மாணவர்கள் முதலிடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 15, 2023

அமெரிக்காவில் பட்டப் படிப்பு இந்திய மாணவர்கள் முதலிடம்

புதுடில்லி, நவ. 15-  இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் எஜு கேஷன் (அய்அய்இ), அமெரிக்கா வில் பன்னாட்டு பட்டதாரி மாணவர்கள் குறித்த ஓபன் டோர்ஸ் என்ற  ஆய்வறிக்கையை வெளியிட் டுள்ளது. 

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமெரிக்க கல்வி நிறுவனங்க ளில் 2022-2023ஆ-ம் கல்வியாண்டில் மொத்தம் 2,68,923 இந்திய மாண வர்கள் பல்வேறு பட்டப் படிப்பு களில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். 

2009-2010ஆ-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சீனாவை விஞ்சியுள்ளது குறிப் பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து அமெரிக் காவுக்கு கல்வி பயில வரும் மாண வர்களின் எண்ணிக்கை 2022-2023ஆ-ம் கல்வியாண்டில் 35 சத வீதம் அதிகரித்து 2,68,923-ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் படிக்கும் 10 லட்சம் வெளிநாட்டு மாணவர்க ளில் 25 சதவீதத்துக்கும் அதிக மானோர் இந்திய மாணவர்களாக உள்ளனர்.

2022-2023இ-ல் பட்டதாரி மாணவர்களின் எண்ணிக்கை 63 சதவீதம் அதிகரித்து 1,65,936-ஆக உள்ளது. இது, 2021-2022 ஆண்டு டன் ஒப்பிடும்போது 64,000 மாண வர்கள் அதிகம். அதேபோன்று, இளங்கலை மாணவர்களின் எண் ணிக்கையும் 16 சதவீதம் உயர்ந் துள்ளது.

ஓபிடி எனப்படும் விருப்பமான நடைமுறைப் பயிற்சியை மேற் கொண்ட தனிநபர்களின் எண் ணிக்கையில் இந்தியா (69,062 பேர்) முன்னணியில் உள்ளது. ஓபிடி என்பது ஒரு வகையான தற் காலிக பணிக்கான அனுமதியாகும். 2023 ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்திய மாணவர்களுக்காக எஃப், எம் மற்றும் ஜே வகையைச் சேர்ந்த 95,269 விசாக்களை வழங்கி சாதனை படைத்துள்ளது. இது, முந்தைய 2022ஆ-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகம்.

ஆலோசனை மய்யங்கள்

இந்திய மாணவர்கள் அமெரிக் காவில் சரியான மற்றும் தகுதியான படிப்பு வாய்ப்புகளை கண்டறிவ தற்காக டில்லி, சென்னை, கொல் கத்தா, மும்பை, அய்தராபாத் ஆகிய நகரங்களில் ஆலோசனை மய்யங்கள் அமைக்கப்பட்டு சேவை கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம், 4,500-க்கும் மேற் பட்ட அங்கீகாரம் பெற்ற அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள சிறந்த படிப்பு திட்டங்களை விரை வாகவும், துல்லியமாகவும் இந்திய மாணவர்கள் கண்டறிவது எளி தாகி உள்ளது.

இவ்வாறு அய்அய்இ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment