மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருள்களை விற்க தனி கட்டடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 19, 2023

மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருள்களை விற்க தனி கட்டடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, நவ.19 ‘‘மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை’’ விற்பனை செய்யும் கட்டடத்தை நேற்று (18.11.2023) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இணைய தளம் வாயிலாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சுய உதவி குழுக்களின் தயாரிப்பு பொருட்களை வாங்கிடும் வகையில் மதி சந்தை விற்பனை இணைய தளம் மற்றும் சுய உதவி குழுவினர், பொது மக்கள் ஆகியோர் முற்றம் இதழிற்கான சந்தாவினை செலுத்தி, முற்றம் மாத இதழினை தங்களின் இல்லத்திற்கே நேரடியாக அஞ்சல் வாயிலாக பெற் றிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு முற்றம் மாத இதழ் இணைய தளம், கைப்பேசி செயலி ஆகியவற்றையும் இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம் பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். 

இதைத்தொடர்ந்து, மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட் களை அனைத்து தரப்பினரும் வாங்கிடும் வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சுய உதவி குழுவினர் தயாரிக்கும் பொருட்களின் மதி அனுபவ அங்காடி கட்டடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த மதி அனுபவ அங்காடியில் சுய உதவி குழு மகளிரால் நடத்தப்படும் “மதி கஃபே“ என்ற சிற்றுண்டி உணவ கமும் அமைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் நா. எழிலன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திவ்யதர்சினி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் சித்ரா விஜயன் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment